fbpx

சென்னை மக்களே… உங்களுக்கு குடிநீர் பிரச்சினையா…? இன்று 15 இடத்தில் நடைபெறும் குறைதீர் கூட்டம்….!

சென்னை குடிநீர் வாரியத்தின் மாதாந்திர குறைதீர் கூட்டம், 15 பகுதி அலுவலகங்களிலும் இன்று நடைபெறுகிறது.

இது தொடர்பாக சென்னை குடிநீர் வாரியம் வெளியிட்ட செய்திக்குறிப்பில்; சென்னைக் குடிநீர் வாரியம் சார்பில், ஒவ்வொரு மாதமும் 2-வது சனிக்கிழமை குறை தீர்க்கும் கூட்டங்கள் நடத்தப்பட்டு வருகிறது. இம்மாதத்துக்கான குறை தீர்க்கும் கூட்டம் இன்று காலை 10 மணி முதல் பிற்பகல் 1 மணி வரை குடிநீர் வாரியத்தின் 15 இடங்களில் உள்ள பகுதி அலுவலகங்களிலும் நடைபெறும். இந்த குறை தீர்க்கும் கூட்டங்கள் வாயிலாக பொதுமக்கள் பயன்பெற வேண்டும் என்பதற்காக ஒவ்வொரு பகுதி அலுவலகங்களிலும் ஒரு மேற்பார்வைப் பொறியாளர் தலைமையில் இக்கூட்டம் நடைபெறும்.

எனவே, இந்த குறை தீர்க்கும் கூட்டத்தில் பொதுமக்கள் பங்கேற்று குடிநீர், கழிவுநீர் தொடர்பான பிரச்சினைகள், குடிநீர், கழிவுநீர் வரி மற்றும் கட்டணங்கள், நிலுவையில் உள்ள குடிநீர், கழிவுநீர் புதிய இணைப்புகள் தொடர்பான சந்தேகங்களை நேரில் மனுக்கள் வாயிலாக தெரிவிக்கலாம். மேலும், மழைநீர் சேகரிப்பு மற்றும் பராமரிப்பு தொடர்பான விளக்கங்களையும் இக்கூட்டத்தின் வாயிலாக தெரிந்து கொள்ளலாம்.

English Summary

The Chennai Drinking Water Board’s monthly grievance redressal meeting is being held today at all 15 regional offices.

Vignesh

Next Post

பூமியை மட்டுமல்ல, கொரோனா சந்திரனையும் இந்த அளவுக்கு பாதித்ததா?. விஞ்ஞானிகள் கூறும் அதிர்ச்சி காரணம்!

Sat Feb 8 , 2025
Did Corona affect not only the Earth, but also the Moon to this extent? Scientists say the shocking reason!

You May Like