fbpx

மக்களே…! அடுத்த 4 நாட்களுக்கு இப்படி தான் இருக்கும்…! வானிலை ஆய்வு மையம் சொன்ன தகவல்…!

தமிழகத்தில் 7-ம் தேதி வரை மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

இது குறித்து வானிலை மையம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில்; கிழக்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக, இன்று மற்றும் நாளை தமிழக கடலோர மாவட்டங்கள் மற்றும் அதனை ஒட்டிய மாவட்டங்கள், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். இதர மாவட்டங்களில் வறண்ட வானிலை நிலவக்கூடும் என கூறப்பட்டுள்ளது.

வரும் 6,7 ஆகிய தேதிகளில் தென் தமிழக மாவட்டங்கள், டெல்டா மற்றும் அதனை ஒட்டிய மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். இதர மாவட்டங்களில் வறண்ட வானிலை நிலவக்கூடும்.

சென்னையை பொறுத்தவரை அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 31 முதல் 32 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 22-23 டிகிரி செல்சியஸ் அளவில் இருக்கக்கூடும். மீனவர்களுக்கு எந்த எச்சரிக்கையும் இல்லை வழக்கம் போல மீன்பிடிக்கச் செல்லலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Vignesh

Next Post

மாநிலம் முழுவதும் தடை..‌.! அதிரடியாக உத்தரவிட்ட முதலமைச்சர் ஜெகன் மோகன் ரெட்டி அரசு...!

Wed Jan 4 , 2023
பொதுமக்களின் பாதுகாப்பைக் காரணம் காட்டி, தேசிய நெடுஞ்சாலைகள் உள்ளிட்ட சாலைகளில் அரசியல் கட்சிகள் பொதுக் கூட்டங்கள், பேரணிகள் நடத்த தடை விதித்து ஜெகன் மோகன் ரெட்டி தலைமையிலான ஆந்திர அரசு உத்தரவு பிறப்பித்தது. டிசம்பர் 28 அன்று கந்துகுருவில் சந்திரபாபு நாயுடு நடத்திய பேரணியில் கூட்ட நெரிசலில் சிக்கி 8 பேர் உயிரிழந்ததை அடுத்து இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. கடந்த நான்கு நாட்களுக்கு முன்பு, அமராவதி அருகே சந்திரபாபு நாயுடு […]

You May Like