தமிழ்நாட்டில் அடுத்த 2 மணி நேரத்தில் 14 மாவட்டங்களில் இடி, மின்னலுடன் மழை பெய்யும் என சென்னை வானிலை மையம் மஞ்சள் அலர்ட் எச்சரிக்கையை விடுத்திருக்கிறது.
மத்திய வங்கக்கடல் பகுதியில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்று, இன்று ஒடிசா மாநிலம் பூரி, மேற்கு வங்க மாநிலம் திகா கடற்கரை இடையே கடக்கக் கூடும். இதனால் தமிழகத்தில் 14 மாவட்டங்களில் இடி, மின்னலுடன் மழை பெய்யும் என சென்னை வானிலை மையம் மஞ்சள் அலர்ட் எச்சரிக்கையை விடுத்திருக்கிறது.
அடுத்த 2 மணி நேரத்தில் அதாவது இரவு 7 மணிவரை நீலகிரி, கோவை, திருப்பூர், தேனி, திண்டுக்கல், திருநெல்வேலி, கன்னியாகுமரி, புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, கடலூர், மற்றும் தென்காசியில் இடி, மின்னலுடன் மழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் மஞ்சள் அலர்ட் விடுத்திருக்கிறது.
64.5 மி.மீ முதல் 115. 5 மி.மீ வரை மழை பெய்யும் என எதிர்பார்க்கப்பட்டால், மஞ்சள் அலர்ட் விடுக்கப்படும். இதுவே, ஒரு நாளில் 115.6 முதல் 204.4 மிமீ வரையிலான மழைப்பொழிவுக்கு ஆரஞ்சு அலர்ட் விடுக்கப்படும். இதுவே, மக்களின் இயல்பு நிலை பாதிக்கும் வகையில் மழைப் பெய்வதற்கான வாய்ப்புகள் இருக்கும் போது ரெட் அலர்ட் விடப்படும். இந்த எச்சரிக்கை விடுக்கப்பட்டால் போக்குவரத்து, மின்சாரம், இணையம், மற்றும் தொலைத் தொடர்பு துண்டிக்கப்படுவதற்கு வாய்ப்புகள் இருக்கின்றன என்று அர்த்தம். 24 மணி நேரத்தில் 204.5 மிமீக்கு அதிகமாக மழை பெய்யும் போது ரெட் அலர்ட் விடுக்கப்படுகிறது.
Read more ; ரூ.2000 UPI பரிவர்த்தனை.. சர்வீஸ் சார்ஜுக்கு 18% ஜிஎஸ்டி? முடிவை மாற்றிய மத்திய அரசு..!!