ஆஸ்கர் விருது வென்ற The Elephant Whisperers ஆவணப்பட இயக்குநர் கார்த்திகிக்கு தமிழக அரசு சார்பில் ரூ.1 கோடி பரிசு வழங்கப்பட்டது..
இந்தியாவில் உருவான The Elephant Whisperers என்ற ஆவண குறும்படத்திற்கு ஆஸ்கர் விருது கிடைத்தது.. முதுமலையை சேர்ந்த பொம்மன், பெள்ளி தம்பதிக்கும், ரகு, அம்மு என்ற யானைகளுக்கும் இடையே இருந்த ஆழமான அன்பையும் பாசத்தையும் அந்த ஆவணப்படம் விவரித்திருந்தது.. இதனிடையே The Elephant Whisperers ஆவணப்படத்தில் இடம்பெற்ற தம்பதி, கடந்த வாரம் சென்னை தலைமை செயலகத்தில் முதலமைச்சர் ஸ்டாலின் சந்தித்தனர்.. அவர்களுக்கு வாழ்த்து தெரிவித்தத முதலமைச்சர், இருவருக்கும் தலா ரூ.1 லட்சம் நிதியுதவி வழங்கி கௌரவித்தார்..
இந்நிலையில் ஆஸ்கர் விருது பெற்ற “The Elephant Whisperers” ஆவணப்படத்தை உருவாக்கிய கார்த்திகி கோன்சால்வஸ் சென்னை தலைமை செயலகத்தில் முதலமைச்சர் ஸ்டாலினை சந்தித்தார்.. அப்போது கார்த்திகி ஆஸ்கர் விருதினை முதலமைச்சரிடம் காண்பித்து வாழ்த்து பெற்றார்.. இதை தொடர்ந்து முதலமைச்சர் ஸ்டாலின் தமிழக அரசு சார்பில் கார்த்திகிக்கு ரூ.1 கோடி பரிசு வழங்கினார்.. ரூ.1 கோடிக்கான காசோலையும், பாராட்டு சான்றிதழையும் வழங்கி கௌரவித்தார்.. அப்போது வனத்துறை அமைச்சர் மதிவேந்தன், தலைமை செயலாளர் இறையன்பு ஐ.ஏ.எஸ் ஆகியோர் உடனிருந்தனர்..