அடுத்த ஆண்டு 24 நாட்கள் அரசு விடுமுறையாக அறிவித்து தலைமைச் செயலாளர் இறையன்பு உத்தரவிட்டுள்ளார்.
தமிழகத்தில் 2023ஆம் ஆண்டில், 5 ஞாயிற்றுக்கிழமைகள் உள்பட, 24 அரசு பொது விடுமுறை நாள்களை தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது. இதுகுறித்து தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ள அரசாணையில்; “மாநில அரசு அலுவலகங்களுக்கும் தமிழகத்தில் உள்ள கூட்டுறவு வங்கிகள் உள்பட அனைத்து வணிக வங்கிகள், கழகங்களுக்கும் 2023-ம் ஆண்டிற்கான பொது விடுமுறை நாட்களை தமிழக அரசு அறிவித்துள்ளது.
இந்தப் பொது விடுமுறை நாள்கள், மாநில பொதுத்துறை நிறுவனங்கள், அரசின் அனைத்து வாரியங்கள் முதலியவற்றுக்கும் பொருந்தும் எனவும் தமிழக அரசின் கட்டுப்பாட்டின் கீழுள்ள அனைத்து அலுவலகங்களும், பின்வரும் நாள்களில் மூடப்படவேண்டும் என அறிவுறுத்தியுள்ளது. பொது விடுமுறை நாள்களாக குறிப்பிடப்பட்ட “ஞாயிற்றுக் கிழமைகளுடன்” பின்வரும் நாள்களும், 2023ஆம் ஆண்டிற்கான பொது விடுமுறை நாள்களாக கருதப்படும் என தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது.
விடுமுறை பட்டியல்: