மாநகர் போக்குவரத்துக் கழக பணியாளர்கள் பணிமணைகளில் பாதுகாப்புடண் பணிபுரிய கீழ்கண்ட நடைமுறைகளை பின்பற்ற வேண்டும்.
பணிமனையின் நுழைவு வாயிலில் இருந்து தாங்கள் செல்லும் பிரிவிற்கு ஓரமாகவும், பாதுகாப்பாகவும் சென்றிட வரையறுக்கப்பட்ட (மஞ்சள் வர்ண குறியீடு) பகுதியில் நடந்து செல்ல வேண்டும்.’இருசக்கர வாகனங்களை எக்காரணம் கொண்டும் வாகனம் நிறுத்தும் இடம் தவிர மற்ற பகுதிகளில் நிறுத்தவும் கூடாது, இயக்கிச் செல்லவும் கூடாது. பணிமனையின் உள்ளே வரும் பேருந்துகள் நுழைவு வாயிலில் இருந்து பணி மனைக்குள் வரும்போது, பணியாளர்களின் பாதுகாப்பிற்காக கண்டிப்பாக 5 கிலோ மீட்டர் வேகத்தில் மட்டுமே இயக்கப்பட வேண்டும். நுழைவு வாயில் மற்றும் Yard பகுதிகளில் 5 கிலோ மீட்டர் வேகம் மட்டுமே என்கிற விளம்பரப் பலகையை பொருத்திட வேண்டும்.

தொழில்நுட்பப் பணியாளர்கள் பணி நேரத்தில் உரிய காலணிகள் அணிந்து பணியாற்றவதால் கால்களில் எவ்வித பாதிப்பும் ஒன்றி பாதுகாப்புடன் பணிபுரியலாம் தொழில்நுட்ப பணியாளர்கள் “Welding பணி செய்யும் போது கண்களில் பாதிப்பு ஏற்படாமல் பாதுகாத்திட “Safety Glass” அணிந்து பணியாற்றிட வேண்டும். மேலும், பேருந்திற்குள் ‘Welding பணி செய்திடும் போது கண்டிப்பாக பேட்டரி துண்டிக்கப்பட்டு இருக்க வேண்டும்.
பகல் பொழுதில் பேருந்துகள் தொழில்நுட்ப பணிகளுக்காக பணிமனைக்குள் இயக்கப்படும் போது ஓட்டுனர் உரிமம் இல்லாத எந்த ஒரு பணியாளரும் பேருந்தினை இயக்கக்கூடாது. பேருந்திணை பணிமனையின் உள்ளே வேறு
இடம் மாற்றி நிறுத்த வேண்டி இருப்பின் மேற்பார்வையாளரின் அனுமதியுடன் பயிற்சி பெற்ற தொழில்நுட்பப் பணியாளர்களை அல்லது Workshop Driver-களை மட்டுமே பயன்படுத்த வேண்டும். பேருந்தினை பின்னோக்கி இயக்க வேண்டிய சூழலில் கண்டிப்பாக மற்றொருபணியாளர் Singnallar ஆக பணி செய்திட வேண்டும் என்பதணை உறுதிப்படுத்திட வேண்டும்.