விபத்துக்களில் காயடைந்தவர்களுக்கான இழப்பீடு ரூ.12,500 லிருந்து ரூ.50,000-மாக உயர்த்தப்பட்டுள்ளது.
நெடுஞ்சாலை மேம்பாட்டுத் திட்டங்களில் ஈடுபடும் ஒப்பந்ததாரர்கள் காப்பீடு செய்து கொள்வதற்கான வழிமுறைகள் உள்ள நிலையில், ஒப்பந்ததாரர் நியமிக்கப்பட்ட தேதியிலிருந்து, திட்ட நிறைவு சான்றிதழ் வழங்கும்வரை ஏதேனும் சேதம் ஏற்பட்டால் அதனை சரிகட்ட காப்பீடுகள் அவசியமாகிறது.
பணிகள், தாவரங்கள், எந்திரங்களுக்கான காப்பீடு. ஒப்பந்ததாரரின் உபகரணங்கள், ஆவணக்களுக்கான காப்பீடு. ஒப்பந்ததாரரின் இயலாமைக்கான காப்பீடு. நபர்களின் காயம் மற்றும் சொத்துக்கள் சேதத்திற்கான காப்பீடு. இதற்கிடையே, மோட்டார் வாகன (திருத்த) சட்டம் 2019-ன் 161-வது பிரிவின்படி, மோதிவிட்டு தப்பியோடும் விபத்துக்களில், காயடைந்தவர்களுக்கான இழப்பீடு ரூ.12,500 லிருந்து ரூ.50,000-மாகவும், விபத்தில் உயிரிழப்பு ஏற்பட்டால் வழங்கப்படும் இழப்பீடு ரூ.25,000 லிருந்து ரூ.2,00,000-மாகவும் உயர்த்தப்பட்டுள்ளது.
புதிய இழப்பீட்டுக்கான உத்தரவை சாலைப்போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை அமைச்சகம் அறிவிக்கையாக வெளியிட்டுள்ளது.