பரபரப்பில் நாடு!… வாக்கு எண்ணிக்கை எதிரொலி!… இன்று இதெல்லாம் இயங்காது!

Tasmac: மக்களவைத் தேர்தல் வாக்கு எண்ணிக்கை இன்று காலை 8மணிக்கு தொடங்கவுள்ளநிலையில், தமிழகத்தில் டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் ஒரே கட்டமாக கடந்த ஏப்ரல் 19ஆம் தேதி 2024 மக்களவைத் தேர்தல் நடந்த முடிந்தது, இந்நிலையில் மக்களவைத் தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை இன்று நடைபெற இருக்கின்றது. வாக்கு எண்ணும் பணி இன்று காலை 8 மணி அளவில் தொடங்கி இருக்கின்றது. இதற்காக தமிழகம் முழுவதும் ஒருலட்சம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

அதன்படி, எவ்வித அசம்பாவிதமும் ஏற்படாமல் இருக்கும் வகையில் இன்று ஒரு நாள் மட்டும் அனைத்து டாஸ்மாக் மதுபான கடைகளும், மதுபானக்கூடங்கள் மற்றும் எப் எல் 1 முதல் எப் எல் 11 வரை அனைத்தும் மூட உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. ஹோட்டல் மற்றும் கிளம்புகளில் இயங்கி வரும் மதுபானக்கூடங்கள் மற்றும் டாஸ்மாக் மதுபான கடைகளும் மூட உத்தரவிட்டுள்ளனர்.

இந்த உத்தரவினை மீறி மது விற்பனையில் ஈடுபடுவது தெரிய வந்தால் அவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் மாவட்ட நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. வாக்கு எண்ணும் பணி தொடங்க உள்ளதால் வாக்குச்சாவடிகளில் ஏற்பாடுகள் தீவிர படுத்தப்பட்டுள்ளது. ஆங்காங்கே போலீசார் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

Readmore: தேர்தல் கருத்துக்கணிப்பு எதிரொலி : 3.5% உயர்ந்த சென்செக்ஸ்.. 23 ஆயிரத்தை கடந்த நிஃப்டி.. வரலாற்று உச்சம்!

Kokila

Next Post

இன்று வாக்கு எண்ணிக்கை!! ஒடிசா மாநில அரசு கலைப்பு!

Tue Jun 4 , 2024
ஒடிசாவில் சட்டசபை தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை இன்று நடைபெற உள்ளநிலையில், முதலமைச்சர் நவீன் பட்நாயக் தலைமையிலான சட்டப்பேரவையை கலைத்து ஆளுநர் ரகுபர் தாஸ் உத்தரவிட்டுள்ளார். இந்தியாவில் மக்களவைத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற்று முடிந்துள்ளது. கடந்த சனிக்கிழமை இரவே எக்ஸிட் போல் முடிவுகளும் வெளியாகின. அந்த முடிவுகளின் அடிப்படையில் மீண்டும் பாஜகவே ஆட்சி அமைக்கும் என கணிக்கப்படுகிறது. நடைபெற்று முடிந்த இந்த மக்களவை தேர்தலோடு ஆந்திரா, சிக்கிம், ஒடிசா, அருணாச்சல […]

You May Like