fbpx

”உங்களுக்கு பலமாக நாடே நிற்கிறது”..!! வினேஷ் போகத்துக்கு ராகுல் காந்தி ஆறுதல்..!!

ஒலிம்பிக் தொடர் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், இந்திய மல்யுத்த வீராங்கனை வினேஷ் போகத், அபாரமாக ஆடி இறுதிப்போட்டிக்கு முன்னேறினார். இன்று அவர் இறுதிப்போட்டியில் விளையாட இருந்தார். 50 கிலோ எடைப்பிரிவில் இறுதிப்போட்டிக்கு முன்னேறியுள்ள வினேஷ் போகத், போட்டிக்குரிய எடையை விட 100 கிராம் அதிகம் இருப்பதால், அவர் தகுதி நீக்கம் செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டது.

இதனால், அவர் பதக்கம் வெல்லும் வாய்ப்பை இழந்தார். இது கோடிக்கணக்கான இந்திய ரசிகர்களுக்கு ஏமாற்றத்தை அளித்துள்ளது. இதனால், 50 கிலோ எடைப்பிரிவில் தங்கப்பதக்கத்தை அமெரிக்க வீராங்கனை கைப்பற்றினார். வினேஷ் போகத், இரவு முழுவதும் கண் விழித்து தீவிர உடற்பயிற்சி மேற்கொண்டார். ஆனாலும், அவர் 50 கிலோவை காட்டிலும் 100 கிராம் எடை அதிகளவில் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு இந்தியா சார்பில் பல்வேறு தரப்பினரும் கண்டனம் தெரிவித்த நிலையில், பலரும் வினேஷ் போகத்துக்கு ஆறுதல் கூறி வருகின்றனர்.

அந்த வகையில், எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவ்ல், “உலக சாம்பியன் மல்யுத்த வீரர்களை தோற்கடித்து இறுதிப் போட்டிக்கு முன்னேறிய இந்தியாவின் பெருமைக்குரிய வினேஷ் போகட், தகுதி நீக்கம் செய்யப்பட்டிருப்பது வருத்தமளிக்கிறது. இந்த முடிவை இந்திய ஒலிம்பிக் சங்கம் கடுமையாக எதிர்த்து நாட்டின் மகளுக்கு நீதி வழங்கும் என்ற முழு நம்பிக்கை எங்களுக்கு உள்ளது. வினேஷ் மனம் தளரக்கூடியவர் அல்ல. அவர் இன்னும் வலுவாக களம் திரும்புவார் என்ற நம்பிக்கை எங்களுக்கு உள்ளது. நீங்கள் எப்போதும் நாட்டிற்கு பெருமை சேர்த்திருக்கிறீர்கள் வினேஷ். இன்றும் உங்கள் பலமாக முழு நாடும் உங்களுடன் நிற்கிறது” என்று பதிவிட்டுள்ளார்.

Read More : தினமும் காலையில் அலாரம் வைத்து எழுபவரா நீங்கள்..? இவ்வளவு பிரச்சனைகள் வருமா..? எச்சரிக்கும் நிபுணர்கள்..!!

English Summary

India’s pride Vinesh Phogat, who defeated world champion wrestlers to reach the finals, has been disqualified.

Chella

Next Post

நேபாளத்தில் ஹெலிகாப்டர் விழுந்து நொறுங்கியதில் 4 பேர் பலி..!!

Wed Aug 7 , 2024
Helicopter crashes in Nepal's Nuwakot, 4 dead: Report

You May Like