fbpx

மனைவியை பைக்கில் கட்டி இழுத்து சென்ற கொடூரன்!. தட்டிக்கேட்காத கிராம மக்கள்!. வைரல் வீடியோ!

Rajasthan: ராஜஸ்தானில் மனைவியை இருசக்கர வாகனத்தில் கட்டி இழுத்துச்சென்று கணவன் கொடுமைப் படுத்தும் வீடியோ வைரலாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ராஜஸ்தானின் ஜுன்ஜுனு, நாகவுர், பாலி மாவட்டங்களில், மனைவியை பணம் கொடுத்து வாங்கும் வழக்கம் உள்ளது. அவ்வாறு வாங்கப்படும் பெண்ணை, பண்ணை வேலை, வீட்டு வேலைகளுக்கு அடிமையை போல பயன்படுத்தி வருகின்றனர். இந்தநிலையில், கடந்த 6 மாதங்களுக்கு முன்பு, பிரேம் ராம் மேக்வால் என்பவர் பஞ்சாப்பைச் சேர்ந்த சுமித்ரா (25) என்பவரை வரதட்சணையாக ரூ.2 லட்சம் கொடுத்து திருமணம் செய்து வந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

திருமணத்தைத் தொடர்ந்து, பிரேமரம் சுமித்ராவை நஹர்சிங்புராவுக்கு அழைத்து வந்தார். அண்டை வீட்டாரின் கூற்றுப்படி, பிரேமரம் சுமித்ராவை தனிமைப்படுத்தினார், மேலும் பக்கத்து பெண்கள் உட்பட யாருடனும் பேச அனுமதிக்கவில்லை. சம்பவத்தன்று, விதிக்கப்பட்ட கட்டுப்பாடுகள் தொடர்பாக சுமித்ரா தனது கணவர் மற்றும் மாமியாருடன் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார்.

இதையடுத்து மனைவி சுமித்ராவை தனது இருசக்கர வாகனத்தில் கால்களை கட்டி இழுத்துச்சென்று கொடுமைப்படுத்தும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. ஜெய்சல்மாரில் உள்ள சகோதரி வீட்டுக்கு செல்ல இருந்த மனைவியை அவர் அடித்து துன்புறுத்தியதாகவும், இதுபோல பலமுறை அவர் கொடூர செயலில் ஈடுபட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.

இந்த வீடியோ வைரலானதையடுத்து, பிரேம் ராம் மேக்வாலை போலீசார் கைது செய்துள்ளதாகவும், படம் பிடித்த நபர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் உள்ளூர்வாசிகள் கூறுகின்றனர். பாதிக்கப்பட்ட பெண், ஜெய்சல்மாரில் இருந்து திரும்பியவுடன் இந்த வழக்கில் மேற்கொண்டு நடவடிக்கை எடுக்கப்படும் என, போலீஸ் தரப்பில் கூறப்படுகிறது.

Readmore: சுட்டெரிக்கும் வெயில்!. ஓராண்டில் சுமார் 50,000 பேர் பலி!. ஐரோப்பிய நாடுகளின் அவலம்!

English Summary

Drunk Husband Drags Wife Behind Motorcycle For A Few Meters After She Protests Against Imposed Restriction At Home In Rajasthan’s Nagaur

Kokila

Next Post

வரும் 16-ம் தேதி இலவச வேலை வாய்ப்பு முகாம்...!

Wed Aug 14 , 2024
A free employment camp is going to be held in Dharmapuri on the 16th.

You May Like