fbpx

ஆதார் – வோட்டர் ஐடி இணைக்க மார்ச் 31-ம் தேதி வரை கால அவகாசம்…! செயலி மூலம் எப்படி இணைப்பது…?

இந்திய தேர்தல்‌ ஆணையத்தின்‌ ஆணையின்படி வாக்காளர்‌ பட்டியலுடன்‌ ஆதார்‌ எண்ணை இணைக்கும்‌ பணியானது கடந்த 01.08.2022 முதல்‌ தொடங்கி நாளது வரை நடைடுபற்று வருகிறது. இந்நிலையில்‌, வாக்காளர்கள்‌ எவரேனும்‌ தங்களது அதார்‌ விவரங்களை வாக்காளர்‌ பட்டியலுடன்‌ நாளது வரை இணைக்காமல்‌ இருந்தால், அவ்வாக்காளர்களுக்காக கால அவகாசம் 2024 மார்ச் 31-ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

எனவே, பொதுமக்கள்‌ தாமாக முன்வந்து தங்களுக்கு அருகாமையில்‌ உள்ள வாக்குசாவடி நிலையங்களில்‌ தங்களுடைய ஆதார்‌ மற்றும்‌ வாக்காளர்‌ பதிவு எண்‌ விவரங்களை படிவம்‌ 6B -யில்‌ பூர்த்தி செய்து வாக்குசாவடி நிலைய அலுவலரிடம்‌ ஒப்படைக்க வேண்டும்.

My Voter செயலி மூலம் எப்படி இணைப்பது…?

கூகுள் பிளே ஸ்டோர் அல்லது ஆப்பிள் ஆப் ஸ்டோரில் இருந்து Voter Helpline செயலியை டவுன்லோட் செய்ய வேண்டும். பின்னர் அந்த செயலியை ஓபன் செய்ததும் ‘I Agree’ ஆப்ஷனை கிளிக் செய்து நெக்ஸ்ட் கொடுக்க வேண்டும். அதில் ‘Voter Registration’ என உள்ள முதல் ஆப்ஷனை தேர்வு செய்ய வேண்டும். அதில் அங்கீகார படிவம் 6B-யை ஓபன் செய்ய வேண்டும்.

பின்னர் உங்கள் ஆதார் எண்ணுடன் பதிவு செய்யப்பட்டுள்ள மொபைல் எண்ணை உள்ளிட்டு, OTP அனுப்புவதற்கான ஆப்ஷனை தேர்வு செய்ய வேண்டும்.மொபைல் எண்ணுக்கு வரும் OTP -யை அதில் உள்ளிட்டு, Verify செய்ய வேண்டும்.அதில் வாக்காளர் அடையாள அட்டை உள்ளது என்ற ஆப்ஷனை தேர்வு செய்து, அதன் எண்ணை (EPIC) உள்ளிட வேண்டும்.மாநில தேர்வு விவரங்கள் வந்ததும் ‘Proceed’ ஆப்ஷனை தேர்வு செய்ய வேண்டும்.

பின்னர் ஆதார் எண், பதிவு செய்யப்பட்ட மொபைல் எண் போன்ற விவரங்களை உள்ளிட வேண்டும். அதை செய்ததும் ‘Done’ கொடுத்தால் படிவம் 6B வரும். கொடுக்கப்பட்டுள்ள விவரங்களை மீண்டும் ஒரு முறை சரி பார்த்துக் கொண்டு ‘Confirm’ கொடுத்தால் அந்த படிவம் சமர்ப்பிக்கப்படும்.

Vignesh

Next Post

தேர்தல் ஆணையர் பதவிக்காலம் 5 ஆண்டுகளாக குறைப்பு!… தமிழ்நாடு சட்டப்பேரவையில் மசோதா நிறைவேற்றம்!

Fri Feb 16 , 2024
தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையர், ஆறு ஆண்டுகள் வரை பதவியில் இருக்க முடியும் என்பதை, ஐந்து ஆண்டுகளாக மாற்றும் சட்ட மசோதா, நேற்று சட்டசபையில் நிறைவேற்றப்பட்டது. மாநில தேர்தல் ஆணையரின் பதவி காலம், தற்போது இரண்டு ஆண்டுகளாக உள்ளது. மேலும் இரண்டு தொடர்ச்சியான கால அளவுகளுக்கு, அவர் மீண்டும் நியமிக்கப்படுவதற்கு தகுதி உடையவர். மொத்தத்தில், ஆறு ஆண்டுகளுக்கு பதவி வகிக்கலாம். அவரது பதவி காலத்தின் போது, 65 வயதை நிறைவு […]

You May Like