2024-25 மதிப்பீட்டு ஆண்டிற்கு வருமான வரிக்கணக்கை தாக்கல் செய்வதற்கான காலக்கெடுவை சட்டத்தின் பிரிவு 139 இன் துணைப் பிரிவு (1) இன் கீழ் 2024, நவம்பர் 15 வரை நீட்டித்துள்ளது.
மத்திய நேரடி வரிகள் வாரியம் (சிபிடிடி) 2024-25 மதிப்பீட்டு ஆண்டிற்கு வருமான வரிக்கணக்கை தாக்கல் செய்வதற்கான காலக்கெடுவை சட்டத்தின் பிரிவு 139 இன் துணைப் பிரிவு (1) இன் கீழ் 2024, நவம்பர் 15 வரை நீட்டித்துள்ளது. இது சட்டத்தின் பிரிவு 139-ன் துணைப் பிரிவு (1) க்கு விளக்கமளிக்கப்பட்டுள்ள பிரிவு 2-ன் (ஏ) -ல் குறிப்பிடப்பட்ட மதிப்பீட்டாளர்களின் விஷயத்தில் 2024, அக்டோபர் 31 ஆகும்.இது பற்றிய விவரம் மத்திய நேரடி வரிகள் வாரியத்தின் 26.10.2024 தேதியிட்ட சுற்றறிக்கை எண்.13/2024-ல் உள்ளது. மேற்படி சுற்றறிக்கை www.incometaxindia.gov.in என்ற இணையதளத்தில் கிடைக்கும்.
வருமான வரி சட்டத்தின் கீழ் குறிப்பிட்ட வரி செலுத்துவோர் வருமான வரி தணிக்கையை முடித்து மதிப்பீட்டு ஆண்டின் செப்டம்பர் 30 ஆம் தேதிக்குள் அறிக்கையை சமர்ப்பிக்க வேண்டும். வரி முறைகளை எளிமைப்படுத்த எடுக்கப்பட்ட நடவடிக்கைகளால் வருமான வரிக் கணக்குத் தாக்கல் செய்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. 5 லட்சம் வரை வருமானம் ஈட்டுபவர்களுக்கிடையில் வருமான சமத்துவமின்மை 74.2 சதவீதம் குறைந்துள்ளது. இது குறைந்த வருமானம் உள்ளவர்களிடையே அரசாங்கத்தின் முன்முயற்சிகள் திறம்பட வருமானத்தை அதிகரிப்பதைக் காட்டுகிறது. நேரடி வரி பங்களிப்பு 14 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு உயர்ந்துள்ளது.