முகூர்த்த நாளான இன்று சார்பதிவாளர் அலுவலகம் இயங்கும் என்று பதிவுத்துறை அறிவித்துள்ள நிலையில் தமிழ்நாடு பதிவுத்துறை பணியாளர் சங்கங்களின் கூட்டமைப்பு பணியை புறக்கணிக்க போவதாக அறிவித்துள்ளது.
பொதுமக்களின் நலன் கருதி அசையா சொத்து குறித்த ஆவணப்பதிவுகளை மங்களகரமான நாட்களில் மேற்கொள்ள பொதுமக்கள் விரும்புவதால் பொது விடுமுறை நாளான இன்று இயங்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. மேலும், மங்களகரமான நாளான 03.02.2025 அன்று அதிகளவில் பத்திரப்பதிவுகள் நிகழும் என்பதால் கூடுதலாக முன்பதிவு வில்லைகள் ஒதுக்கீடு செய்யுமாறு பொதுமக்களிடமிருந்து கோரிக்கைகள் பெறப்பட்டுள்ளன.
பொதுமக்களின் கோரிக்கைகளை ஏற்று மங்களகரமான நாளான 03.02.2025 அன்று ஒரு சார்பதிவாளர் உள்ள அலுவலகங்களுக்கு 100-க்கு பதிலாக 150 முன்பதிவு வில்லைகளும் இரண்டு சார்பதிவாளர்கள் உள்ள அலுவலகங்களுக்கு 200-க்கு பதிலாக 300 முன்பதிவு வில்லைகளும் அதிகளவில் ஆவணப்பதிவுகள் நடைபெறும் 100 அலுவலகங்களுக்கு 100-க்குபதிலாக 150 சாதாரண முன்பதிவு வில்லைகளோடு ஏற்கெனவே வழங்கப்படும் 12 தட்கல் முன்பதிவு வில்லைகளுடன் கூடுதலாக 4 தட்கல் முன்பதிவு வில்லைகளும் பொதுமக்களின் பயன்பாட்டிற்காக வழங்கிட உத்தரவிடப்பட்டுள்ளது.
இந்த நிலையில் முகூர்த்த நாளான இன்று சார்பதிவாளர் அலுவலகம் இயங்கும் என்று பதிவுத்துறை அறிவித்துள்ள நிலையில் தமிழ்நாடு பதிவுத்துறை பணியாளர் சங்கங்களின் கூட்டமைப்பு பணியை புறக்கணிக்க போவதாக அறிவித்துள்ளது. மாநில ஒருங்கிணைப்பு குழுவின் கூட்ட முடிவின் அடிப்படையில் ஏற்கனவே திட்டமிட்டப்படி பணி புறக்கணிப்பு செய்வது என சங்கம் சார்பில் ஒருமித்து முடிவு செய்யப்பட்டுள்ளது.