வேலை நேரத்தில் 1 முதல் 2 மணி நேரம் வரை ஓய்வெடுக்க அனுமதிக்க வேண்டும் என்று தொழிலாளர் பாதுகாப்புத் துறை அறிவுறுத்தி உள்ளது.
கோடை வெயில் தொடக்கத்திலேயே அதிக வெப்பமாக இருந்து வருவதால் பொதுமக்கள் கவனமாக இருக்க வேண்டும். அதே போல தற்காப்பு வழிமுறைகளை பின்பற்றிட மத்திய தொழிலாளர் நலத்துறை அறிவுறுத்தியுள்ளது. வெப்ப அலையிலிருந்து தொழிலாளர்களை பாதுகாக்கும் வகையில் ஒரு நாளைக்கு 4.5 லிட்டர் தண்ணீர் வழங்கவும், வேலை நேரத்தில் 1 முதல் 2 மணி நேரம் வரை ஓய்வெடுக்க அனுமதிக்க வேண்டும் என்று தொழிலாளர் பாதுகாப்பு துறை அறிவுறுத்தி உள்ளது.
உடலின் நீர்ச்சத்து குறையாமல் பராமரிக்கவும், தேவையான அளவு தண்ணீர் குடிக்க வேண்டும். பயணத்தின் போது குடிநீரை எடுத்துச் செல்ல வேண்டும். முடிந்தவரை வீட்டுக்குள் பாதுகாப்பாக இருக்க வேண்டும். நல்ல காற்றோட்டம் மற்றும் குளிர்ந்த இடங்களில் இருக்க வேண்டும். வெள்ளை நிறமுள்ள, காற்றோட்டமான பருத்தி ஆடைகளை அணிய வேண்டும். வெளியில் செல்லும் போது காலணிகளை கட்டாயம் அணிய வேண்டும். மதிய நேரத்தில் வெளியே செல்லும் போது கண்ணாடி மற்றும் குடை கொண்டு செல்ல வேண்டும்.