fbpx

குட் நியூஸ்…! மே 15-ம் தேதி முதல்…! தமிழம் முழுவதும் அரசு பள்ளி ஆசிரியர்களுக்கு மட்டும்…! பள்ளி கல்வித்துறை அறிவிப்பு…!

அரசு பள்ளி ஆசிரியர்களுக்கான கலந்தாய்வு வருகின்ற 15-ம் முதல் நடைபெறும் என பள்ளி கல்வித்துறை அறிவித்துள்ளது.

தொடக்கக்‌ கல்வியில்‌ பணிபுரியும் ஆசிரியர்களுக்கு மலைப்பகுதி சுழற்சி கலந்தாய்வு 15-ம்‌ தேதியும்‌, அரசு நகராட்சி மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்‌ மாறுதல்‌ 15-ம்‌ தேதியும்‌, நடுநிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்‌ மாறுதல்‌ கலந்தாய்வு 16-ம்‌ தேதியும்‌, அரசு நகராட்சி, மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்‌ கலந்தாய்வு 16-ம்‌ தேதியும்‌ நடத்தப்படவுள்ளது.

கடந்த ஆண்டு பணி நிரவல்‌ செய்யப்பட்ட பட்டதாரி ஆசிரியர்கள்‌ மீண்டும்‌ தாங்கள்‌ பணியாற்றிய கல்வி ஒன்றியத்திற்கு மாற்றுவதற்கான கலந்தாய்வு 17-ம்‌தேதியும்‌ நடைபெற உள்ளது. அதேபோல கடந்த ஆண்டு பணிநிரவல்‌ செய்யப்பட்ட இடைநிலை ஆசிரியர்கள்‌, மீண்டும்‌ தாங்கள்‌ பணியாற்றிய கல்வி ஒன்றியத்திற்கு மாற்றுவதற்கான கலந்தாய்வு வரும்‌ 18-ம்‌ தேதி நடைபெற உள்ளது.

பட்டதாரி ஆசிரியர்‌ பணிநிரவல்‌ கலந்தாய்வு ஒன்றியத்திற்குள்‌ 19-ம்‌ தேதி நடைபெறுகிறது. இடைநிலை ஆசிரியர்‌ பணிநிரவல்‌ கலந்தாய்வு ஒன்றியத்திற்குள்‌ வரும்‌ 20-ம்‌ தேதி நடைபெறவுள்ளது, பட்டதாரி ஆசிரியர்‌ மாறுதல்‌ கலந்தாய்வு ஒன்றியத்திற்குள்‌ வரும்‌ 22-ம்‌ தேதி நடைபெற உள்ளது. தொடர்ந்து 26–ம்‌தேதி கலந்தாய்வு நடைபெறும்‌ என பள்ளிக்கல்வித்துறை தெரிவித்துள்ளது.

Vignesh

Next Post

முடிக்கு டை அடிக்கிறீர்களா?... என்னென்ன பக்கவிளைவுகள் ஏற்படும் தெரியுமா?... இந்த பதிவை கண்டிப்பா படியுங்கள்!

Sat May 13 , 2023
வெள்ளை முடியை மறைக்க ஹேர் டையை பயன்படுத்துவதால் என்னென்ன பிரச்னைகள் ஏற்படுகிறது என்பது பற்றி இந்த பதிவில் பார்ப்போம். முன்பெல்லாம் வயதானவர்களுக்குத் தான் வெள்ளை முடி வரும் ஆனால் இப்போது சிறிய வயதுடைய பிள்ளைகளுக்கு கூட இந்த இளநரை பிரச்சினை அதிகம் இருக்கின்றது. இந்த இளநரை பிரச்சினை விட்டமின் B6,B12,பயோடின் மற்றும் விட்டமின் D போன்ற ஊட்டச்சத்து குறைப்பாடு காரணமாகத்தான் வெள்ளைமுடி உருவாகிறது. இதற்கு காரணம் என்னவென்று பார்த்தால் உணவுப்பழக்கம், […]

You May Like