அலகு விட்டு அலகு மாறுதல் பெற்றவர்களை கல்வி ஆண்டு முடிந்ததும் விடுவிப்பு செய்ய தொடக்க கல்வி இயக்குநர் உத்தரவு.
தமிழ்நாடு பள்ளிக் கல்வி இயக்குநரின் செயல்முறைகளின்படி கடலூர் மாவட்டம் நல்லூர் ஒன்றியம், வலசை ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் பட்டதாரி ஆசிரியராக ஆர்சுகன்யா என்பார் பள்ளிக் கல்வித் துறைக்கு அலகு விட்டு அலகு மாறுதல் பெற்றுள்ளதாகவும் தொடக்கக் கல்வி இயக்கக கட்டுப்பாட்டிலிருந்து பள்ளிக் கல்வித் துறைக்கு அலகு விட்டு அலகு மாறுதலில் செல்ல பணிவிடுவிக்குமாறு கோரியுள்ளார்.
மேலும் இதுபோன்றே தொடக்கக் கல்வி இயக்கத்திலிருந்து பள்ளிக்கல்வி இயக்கத்திற்கு அவரு விட்டு அலகு மாறுதல் பெற்ற ஆசிரியர்கள் கோரிக்கை வைத்துள்ளார்கள். தற்போது தொடக்கக் கல்லி இயக்கத்திலிருந்து பள்ளிக் கல்வித் துறைக்கு அலகு விட்டு அவரு மாறுதல் பெற்ற ஆசிரியர்களை மாணவர்களின் நலன் கருதியும், தேர்வுகள் நெருங்குவதாலும் இக்கல்வி ஆண்டு முடியும் வரை பணிபுரிந்து பின்னர் மே மாதம் 31.05.2024 வட்டாரக் கல்வி அலுவலர்களால் விடுவித்து மாறுதல் பெற்ற உயர்நிலை/மேல்நிலைப் பள்ளியில் பள்ளி திறக்கும் நாளன்று பணியில் சேரும் வகையில் பணி விடுவிக்க அனைத்து வட்டாரக்கல்வி அலுவலர்களுக்கும் தக்க அறிவுரை வழங்குமாறு மாவட்டக் கல்வி அலுவலர்களும் (தொடக்கக் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.