fbpx

ஆசிரியர்கள் கவனத்திற்கு… தமிழகம் முழுவதும் இன்று நடைபெறும் கலந்தாய்வு…! மிஸ் பண்ணிடாதீங்க

பணி நிரவல் கலந்தாய்வு இன்று நடைபெற உள்ளதாக பள்ளி கல்வித்துறை இயக்குனர் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக பள்ளிக் கல்வி இயக்குநர் அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கும் அனுப்பிய சுற்றறிக்கையில்; நடப்பு கல்வியாண்டில் ஆகஸ்ட் 1-ம் தேதி மாணவர் எண்ணிக்கையின்படி அரசுப் பள்ளிகளில் முதுநிலை, பட்டதாரி ஆசிரியர் பணியிடங்கள் நிர்ணயம் மேற்கொள்ளப்பட்டன. அதன் அடிப்படையில் உபரி என கண்டறியப்பட்ட ஆசிரியர்களை அந்தந்த மாவட்டத்துக்குள் பணிநிரவல் செய்ய முடிவு செய்யப்பட்டது.

இதற்கான பணி நிரவல் கலந்தாய்வு, மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலகங்கள் வழியாக 20-ம் தேதி நடத்தப்படும் என்று அறிவிக்கப் பட்டிருந்தது. நிர்வாக காரணங்களுக்காக நடைபெறவிருந்த பணி நிரவலானது ஒத்தி வைக்கப்பட்டது. பணி நிரவல் கலந்தாய்வு, இன்று நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கான ஏற்பாடுகளை அந்தந்த மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்கள் மேற்கொண்டுள்ளனர். எனவே ஆசிரியர்கள் தவறாமல் கலந்து கொள்ள வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Vignesh

Next Post

இந்த விஷயம் தெரியுமா.?இரத்தத்தில் கொலஸ்ட்ராலை குறைக்கும் நல்லெண்ணை.!

Mon Nov 27 , 2023
தென்னிந்தியாவில் சமையலுக்கு அதிகம் பயன்படுத்தப்படும் எண்ணெய் நல்லெண்ணெய் ஆகும். இது எள்ளிலிருந்து எடுக்கப்படும் எண்ணெய் ஆகும். கடுகு எண்ணெய் மற்றும் தேங்காய் எண்ணெயை விட இந்த எண்ணெய் தான் சமையலுக்கு அதிகம் பயன்படுத்தப்படுகிறது எள்ளிலிருந்து எடுக்கப்படும் நல்லெண்ணெய் உடலுக்கு தேவையான பல்வேறு சத்துக்களை கொண்டிருப்பதோடு சிறந்த மருத்துவ பயன் உள்ளதாகவும் இருக்கிறது. நல்லெண்ணெய் சமையலுக்கு பயன்படுத்துவதால் கொழுப்பு கட்டிகள் உடலில் ஏற்படாமல் தடுக்கிறது. இந்த நல்லெண்ணெயில் ஜிங்க் சத்து அதிக […]

You May Like