திருவாரூர் மாவட்டத்தில் இன்று பள்ளிகளுக்கு விடுமுறை வழங்கிய மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.
வங்கக் கடலில் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி கடந்த திங்கள்கிழமை காலை காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றது. இந்த காற்றழுத்த மண்டலமானது திரிகோணமலைக்கு அருகே 110 கிலோமீட்டர் தொலைவில் மையம் கொண்டுள்ளது. தூத்துக்குடி, திருவாரூர் உள்ளிட்ட மாவட்டங்களில் பலத்த மழை பெய்து வருகிறது.
இதன் காரணமாக திருவாரூர் மாவட்டத்தில் தொடர்ந்து கனமழை பெய்து வருவதால் மாணவர்கள் பள்ளிக்கு செல்வதில் கடும் சிரமம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில் மாவட்ட ஆட்சியர் இன்று அனைத்து பள்ளிகளுக்கும் விடுமுறை வழங்கி உத்தரவிட்டுள்ளார்.