ஓய்வூதியதாரர்களின் மருத்துவ இழப்பீடு கோரிக்கையை நிராகரிக்கப்பட்டால் 30 நாட்களுக்குள் மாவட்ட அளவிலான குழு, மனுக்கள் மீது முடிவெடுக்கலாம் .
மாத ஊதியதாரர்கள் ஓய்வூதியதாரர்கள் உள்ளிட்ட அனைத்து தரப்பட்ட மக்களையும் மிகவும் அச்சுறுத்தும் செலவுகளில் ஒன்று மருத்துவச்செலவு. எதிர்பாராமல் சில லட்சங்கள் வரை மருத்துவத்திற்கு செலவழிக்க வேண்டிய சூழலில் வருகிறது. அது போன்ற நேரங்களில் மருத்துவ காப்பீடுகள் கை கொடுக்கின்றன. அதற்காகவே பல குடும்பங்கள் தங்கள் சேமிப்பாய் கருதி, மருத்துவ காப்பீடு எடுக்கின்றனர். இந்த நிலையில் அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களின் மருத்துவ இழப்பீடு கோரிக்கையை நிராகரிக்கப்பட்டால் 30 நாட்களுக்குள் மாவட்ட அளவிலான குழு, மனுக்கள் மீது முடிவெடுக்கலாம் தமிழக அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
இது குறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள அரசாணையில்; அரசு ஊழியர்கள், ஓய்வூதியதாரர்களின் மருத்துவ இழப்பீடு கோரிக்கையை நிராகரிக்கப்பட்டால் 30 நாட்களுக்குள் மாவட்ட அளவிலான குழு, மனுக்கள் மீது முடிவெடுக்கலாம்.மாவட்ட அளவிலான குழுவின் முடிவிற்கு எதிராக மேல்முறையீடு செய்தால், மாநில அளவிலான குழுவை ஒரு மாத காலத்திற்குள் அணுக நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.