புதுக்கோட்டை மாவட்ட பகுதியில் உள்ள பொன்னமராவதி பேருந்து ஓட்டுநராகப் பணிபுரிந்து வருபவர் குமார். இவர் சிவகங்கை மாவட்டம் உலகம்பட்டியைச் சேர்ந்தவர். என்றும் போல் இன்றும் பணிக்குச் சென்ற குமார் அரசுப்பேருந்தை ஓட்டிச் சென்றுள்ளார்.
இந்த நிலையில் மேலைச்சிவபுரி என்ற பகுதியிக்கு சென்று கொண்டிருந்த போது ஓட்டுனரான குமாருக்கு திடீரென நெஞ்சுவலி வந்துள்ளது. இதனை அறிந்து கொண்டு குமார் சுதாரித்துக் கொண்டு பேருந்தை ஓரமாக நிறுத்தியுள்ளார். இதனால் , பயணிகளின் உயிருக்கு ஆபத்து நேராத வகையில் காப்பாற்றியுள்ளார்.
ஆனால் இதனையடுத்து மக்களை காப்பாற்றிய ஓட்டுநர் பேருந்திலேயே பரிதாபமாக உயிரிழந்துள்ளார். இச்சம்பவம் சகப் பயணிகளிடையே அதிர்ச்சியினை ஏற்படுத்தியுள்ளது. இது பற்றி தகவல் அறிந்த காவல் துறையினர் வழக்கு பதிவு செய்து அவரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.