fbpx

லிட்டில் சூப்பர் ஸ்டார் சிம்புவின் பத்து தல டப்பிங் பணி நிறைவு : கதாநாயகி பிரியா பவானி ஷங்கர் டிவீட்….!

சிம்பு நடிப்பில் உருவாகியுள்ள பத்து தல படத்தை நெடுஞ்சாலை, சில்லுனு ஒரு காதல் போன்ற படங்களை இயக்கிய ஒபலி என்.கிருஷ்ணா இயக்குகிறார். இந்த திரைப்படத்தை ஸ்டூடியோ கிரீன் ஞானவேல் ராஜா தயாரிக்கிறார். இதில் நடிகை பிரியா பவானி சங்கர், கௌதம் கார்த்திக், கலையரசன், கௌதம் வாசுதேவ் மேனன், டீஜே, ஜோ மல்லூரி, மலையாள நடிகை அனு சித்தாரா, ரெடின் கிங்ஸ்லி ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர்.

இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான் இந்த படத்திற்கு இசையமைக்கிறார். கன்னடத்தில் 2017-ஆம் ஆண்டு வெளியான முப்தி திரைப்படத்தின் தமிழ் ரீமேக்காக உருவாகும் இந்த படத்தில் ஏஜிஆர் என்ற கதாபாத்திரத்தில் சிம்பு நடித்துள்ளார். சமீபத்தில் இந்த படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்தள்ள நிலையில் நிலையில் தற்போது பத்து தல திரைப்படம் ரிலீஸ் தேதியை படக்குழு அறிவித்துள்ளது. அதன்படி இந்த படம் 2023-ம் ஆண்டு மார்ச் மாதம் 30-ந்தேதி திரையரங்குகளில் வெளியாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் நடிகை பிரியா பவானி சங்கர் தனது டப்பிங் பணிகளை முடித்துவிட்டதாக தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். பத்து தல படத்தின் டப்பிங் முடிந்தது. ஜாலியான மறக்கமுடியாத அனுபவத்தை கொடுத்த இயக்குநர் மற்றும் படக்குழுவுக்கு நன்றி. மகிழ்ச்சியாக இந்தப் புத்தாண்டை தொடங்குவோம் என பதிவிட்டுள்ளதற்கு ரசிகர்கள் பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

Kokila

Next Post

பக்கவாதத்தின் தாக்கத்தை குறைக்குமா வாழைப்பழம்..!

Tue Jan 3 , 2023
வாழைப்பழம் கார்போஹைட்ரேட் மற்றும் சர்க்கரையின் நல்ல மூலமாகும். அத்துடன் நார்ச்சத்தும் உள்ளது. வாழைப்பழங்களை சாப்பிடுவது இரத்த சர்க்கரை அளவை அதிகரிக்கலாம். ஆனால் இது நீங்கள் எவ்வளவு சாப்பிடுகிறீர்கள் மற்றும் எவ்வளவு பழுத்திருக்கிறது என்பதைப் பொறுத்தது.  ஒரு பழுத்த வாழைப்பழத்தில் அதிக சர்க்கரை உள்ளது. அதே சமயம் பச்சை வாழைப்பழத்தில் சர்க்கரை குறைவாக உள்ளது மற்றும் இரத்த சர்க்கரை அளவுகளில் குறிப்பிடத்தக்க தாக்கத்தை ஏற்படுத்தாது. வாழைப்பழம் நார்ச்சத்து, வைட்டமின் சி, பொட்டாசியம், […]

You May Like