சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். சுமார் பத்துக்கும் மேற்பட்ட வாகனங்களில் சென்று துணை ராணுவத்தினர் பாதுகாப்புடன் சோதனை நடத்தி வருகின்றனர். பெரம்பூர் பின்னி மில் நிலம் தொடர்பாக எழுந்த ரூ.50 கோடி ஊழல் குறித்து லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை நடத்தினர். பல்வேறு கட்டுமான நிறுவனங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை நடத்திய நிலையில், அமலாக்கத்துறையும் சோதனை நடத்தி வருகிறது.
சென்னை நுங்கம்பாக்கத்தில் கட்டுமான நிறுவன உரிமையாளர் வீட்டில் அமலாக்கத்துறை சோதனை நடத்தி வருகிறது. சென்னை தி.நகர், மேற்கு மாம்பலத்தில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டுள்ளனர். சென்னை தியாகராயர் நகரில் லேண்ட் மார்க் ஹவுசிங் நிறுவன நிர்வாக இயக்குனர் உதயகுமார் வீட்டில் சோதனை நடைபெற்று வருகிறது.
லஞ்ச ஒழிப்புத்துறையின் எப்.ஐ.ஆர். அடிப்படையில் அமலாக்கத்துறை வழக்கு பதிவு செய்துள்ளது. நுங்கம்பாக்கம் கோத்தாரி தெருவில் உள்ள கட்டுமான நிறுவன அதிபர் சுனில் வீட்டில் அமலாக்கத்துறை சோதனை அதிகாரிகள் நடத்தி வருகின்றனர். இச்சம்பவம் சென்னையில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.