fbpx

கொடுத்த கடனை திருப்பிக் கேட்ட தந்தை..!! டிராக்டர் ஏற்றி கொலை செய்த மகன்..!! அதிர்ச்சி சம்பவம்..!!

கொடுத்த கடனை திருப்பிக் கேட்ட தந்தையை டிராக்டர் ஏற்றி மகன் கொலை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மகாராஷ்டிரா மாநிலம் சாங்லி மாவட்டத்தில் உள்ள பெடாக் கிராமத்தைச் சேர்ந்தவர் தாஜி என்ற தாது கணபதி அகாலே (70). இவர் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு மகனுக்கு ரூபாய் 70 ஆயிரம் கடனாக கொடுத்துள்ளார். இதையடுத்து தந்தை, மகனிடம் பணத்தை திருப்பி கேட்டுள்ளார். இதனால் இவர்கள் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதில் வாக்குவாதம் முற்றிய நிலையில் ஆத்திரமடைந்த மகன், தந்தை மீது டிராக்டரை ஏற்றி கொலை செய்துள்ளார்.

இதைத்தொடர்ந்து இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்து வந்த காவல்துறையினர், உயிரிழந்த தாது கணபதி அகாலேவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர், தந்தையை டிராக்டர் ஏற்றிக்கொன்ற மகன் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இச்சம்பவம் அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Chella

Next Post

கொடைக்கானல் அருகே…..! கடமானை வேட்டையாடிய 3 பேர் அதிரடி கைது…..!

Thu May 25 , 2023
கொடைக்கானல் அருகே தாண்டிக்குடி அடுத்துள்ள பெரும்பாறை பகுதியில் கன்னிவாடி வனச்சரகர் ஆறுமுகம் தலைமையில் வனவர் அறிவழகன், வனக்காப்பாளர்கள் பீட்டர் ராஜா, திலக ராஜா, ராமசாமி உள்ளிட்டோர் நேற்று முன்தினம் இரவு ரோந்து பணிக்கு சென்றனர். அப்போது நேர்மறை பகுதியில் இருக்கின்ற காபி தோட்டத்தில் விளக்கு வெளிச்சம் தெரிந்ததால் சந்தேகம் அடைந்த அவர்கள், அந்த பகுதிக்கு சென்று பார்த்தனர் அப்போது சிலர் நெற்றியில் விளக்கை கட்டிக்கொண்டு சுற்றி திரிந்ததாக கூறப்படுகிறது. அவர்களை […]
இதுக்கா இப்படியொரு தண்டனை...மகனுக்கு சூடு போட்டு; கண்ணில் மிளகாய் பொடியை தூவிய கொடூர தாய்...கேரளாவில் பயங்கரம்!

You May Like