தொழில்நுட்ப நிறுவனங்கள் ஊழியர்களை தொடர்ந்து பணிநீக்கம் செய்து வருகிறது. ஆனால், பேஸ்புக்கின் தாய் நிறுவனமான மெட்டா நிறுவனத்தால், பெண் ஒருவர் இரண்டு முறை பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
ஆண்ட்ரியா குஸ்மன் கார்சியா லூனா என்ற ஊழியர், மெட்டா நிறுவனத்தில் இருந்து இரண்டு முறை வெளியேற்றப்பட்டதால், மன உளைச்சலுக்கு உள்ளானதாகவும், வேலை இழந்த துக்கத்தில் 2 மணிநேரம் தொடர்ந்து கதறி அழுததாகத் தனது லிங்க்கெட்ன் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
கடந்த மாதங்களில், எனது 8 வருட பணியில் நான் செய்ததை விட அதிகமாக ஜூம் அழைப்புகளில் மக்கள் அழுவதைக் கண்டேன். இதையெல்லாம் சொல்ல, கார்ப்பரேட் உலகில் மனநலம் பற்றி நிறைய விஷயங்களை நான் உணர்ந்தேன். ஒருவரின் நிதி ஸ்திரத்தன்மை எந்த நேரத்திலும் எந்தக் காரணத்தாலும் பறிக்கப்படலாம்.
நான் நிறுவனத்தில் பணிபுரிந்த காலத்தில் உலகின் சிறந்த திறமைசாலிகளைச் சந்திப்பது உள்ளிட்ட பிரகாசமான விஷயங்களை நான் இன்னும் பார்க்கிறேன். மெட்டாவில் பணிபுரியும் நபர்கள் விதி விலக்கானவர்கள்; எனது குழு மற்றும் மேலாளர்கள் குறிப்பாகப் புத்திசாலிகள்.
எனது கூட்டாளர்கள் கடைசி நாள் வரை தங்கள் ஆதரவையும் பாராட்டையும் காட்டிய அற்புதமான மனிதர்கள். அவை அனைத்தையும் என் இதயத்தில் சுமக்கிறேன். அடுத்து என்ன… 8 வருட இடைவிடாத வேலைக்குப் பிறகு சிறிது நேரம் ஓய்வெடுப்பது சுவாரஸ்யமாக இருக்கும். மீண்டும் கட்டியெழுப்பவும் நம்பிக்கையைப் பெறவும் நான் உற்சாகமாக இருக்கிறேன்” என்று பதிவிட்டுள்ளார்.
இவரின் பதிவு மக்களிடையே கவனம் பெற்று வருகிறது.