மகாராஷ்டிர மாநிலம் மும்பை தானே பகுதியைச் சேர்ந்த மைனர் பெண் ஒருவர், ”தனது காதலன் தன்னை ஆபாச படம் எடுத்து வைத்துக் கொண்டு என்னை மிரட்டி, பணம், நகைகளை கேட்டான். இதனால், எனது வீட்டில் இருந்த தங்க நகைகளை எடுத்து அவனிடம் கொடுத்தேன்” என போலீசில் புகார் அளித்தார். இதையடுத்து, காவல்துறையினரும் அந்த பெண் சொன்னது உண்மைதான் என நினைத்து, சம்பந்தப்பட்ட வாலிபரை பிடித்து விசாரித்துள்ளனர். ஆனால், அப்படி ஏதும் நான் நகை வாங்கவில்லை என தெரிவித்துள்ளார். இதுகுறித்து உதவி போலீஸ் கமிஷனர் கூறுகையில், ”சம்பந்தப்பட்ட பெண் தங்க நகையைக் கொடுத்ததாகச் சொன்ன நபர் அதை விற்பனை செய்யவில்லை. இதனால், அந்தப் பெண்ணிடம் மீண்டும் விசாரித்தோம். அப்போது, அந்தப் பெண் தன்னையும், தன்னுடைய காதலனையும் காப்பாற்றுவதற்காக நாடகமாடியதும், அவர் தனது வீட்டில் தங்க நகைகளைத் திருடி மற்றொரு காதலனிடம் கொடுத்ததும் தெரியவந்தது.
அந்த காதலன் பெண்ணிடம் இருந்து தங்க நகைகளை வாங்கி, ரூ.53,000-க்கு விற்பனை செய்துள்ளான். ஏனென்றால், அந்தப் பெண்ணுக்கும், அவரின் காதலனுக்கும் ஒரே நாளில் பிறந்தநாள் வந்திருக்கிறது. இந்தப் பிறந்தநாளை கொண்டாடுவதற்காக சொந்த வீட்டில் தங்க நகைகளைத் திருடி தனது காதலனிடம் கொடுத்திருக்கிறார். அதனை வாங்கிச் சென்ற 18 வயது காதலனும், அதை விலைக்கு வாங்கிய நகைக்கடைக்காரரும் தற்போது கைது செய்யப்பட்டுள்ளனர். விற்பனை செய்யப்பட்ட நகைகளும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன” என்று தெரிவித்தார்.