fbpx

இனி வாட்ஸ்அப் மூலம் எல்லாம் தெரிந்து கொள்ளலாம்…! தமிழக அரசு அசத்தல் அறிவிப்பு…! முழு விவரம்

தமிழ்நாடு அரசு திட்டங்களை பற்றி மக்கள் தெரிந்துகொள்ள புதிதாக வாட்ஸ்அப் சேனல் தொடங்கப்பட்டுள்ளதாக அரசு தெரிவித்துள்ளது.

இது குறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில்; தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் தலைமையிலான தமிழ்நாடு அரசு பல்வேறு முனைப்பான திட்டங்களைத் தீட்டி சிறப்பான முறையில் நிறைவேற்றி வருகிறது. பொதுமக்கள் அனைத்து அரசுத் திட்டங்கள் குறித்து முழுமையாக அறிந்து கொண்டு பயனடையத் துணைபுரியும் வகையில் தமிழ்நாடு அரசு செய்தி மற்றும் மக்கள் தொடர்புத்துறை சார்பில், Facebook, Instagram, Twitter, Youtube போன்றவற்றில் பக்கங்கள் தொடங்கி சிறப்பாக நடத்தப்பட்டு வருகிறது.

மேலும் இதன் அடுத்த கட்ட முன்னெடுப்பாக அதிகாரபூர்வ கட்செவி (Whatsapp) சேனல் “TNDIPR, Govt of Tamil Nadu” என்ற பெயரில் தொடங்கப்பட்டுள்ளது. அதில் பொதுமக்கள் இணைந்து அரசின் திட்டங்கள் மற்றும் செய்திகளை தெரிந்து கொள்ள கீழ்க்கண்ட துலங்கல் குறியீடு (QR Code) ஸ்கேன் செய்யவும். மேலும் தமிழ்நாடு அரசின் செய்தி-மக்கள் தொடர்புத் துறையின் மேற்கண்ட சமூக வலைதள கொடுக்கப்பட்டுள்ள துலங்கல் தெரிவிக்கப்படுகிறது. பக்கங்களை சிறிய அளவில் குறியீட்டை ஸ்கேன் செய்ய வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Twitter Link: https://x.com/TNDIPRNEWS/status/1800137381603062246?t=9srGgqkumYBoCxTBsZHlpw&s=19

English Summary

The government has announced that a new WhatsApp channel has been launched for people to know about government schemes.

Vignesh

Next Post

ஷாக்!. விண்வெளியில் சுனிதா வில்லியம்ஸ், குழுவினருக்கு உடல்நல பிரச்சனை!. பாக்டீரியா கண்டுபிடிப்பு!

Tue Jun 11 , 2024
Sunita Williams: சர்வதேச விண்வெளி நிலையத்தில் Spacebug கண்டறியப்பட்டுள்ளதால், சுனிதா வில்லியம்ஸ் மற்றும் அவரது குழுவினருக்கு உடல்நல பிரச்சனைக்கு சிக்கலை ஏற்படுத்தியுள்ளது. நாசா விண்வெளி ஆய்வு மையத்தில் பணியாற்றி வரும் இந்திய வம்சாவளியை சேர்ந்தவர் சுனிதா வில்லியம்ஸ், போயிங் ஸ்டார்லைனர் விண்கலன் மூலம் சுனிதா வில்லியம்ஸ் மற்றும் பேரி வில்மோர் ஆகியோர் கடந்த 5ம் தேதி விண்வெளிக்கு புறப்பட்டார். இந்த விண்கலன் பூமிக்கு மேல் விண்வெளியில் சுற்றி வரும் சர்வதேச […]

You May Like