fbpx

தரமான உணவு எது என்று சான்றளிக்கும் அதிகாரம் அரசிடமே உள்ளது…! மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன்…!

மக்கள் உண்பதற்கான தரமான உணவு எது என்று சான்றளிக்கும் அதிகாரம் அரசிடமே உள்ளது. அரசு சாரா நிறுவனங்கள் அதைச் செய்வது சரியல்ல என மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறியுள்ளார்.

ஹைதராபாத்தில் நடைபெற்ற செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன்; மக்கள் உண்பதற்கான தரமான உணவு எது என்று சான்றளிக்கும் அதிகாரம் அரசிடமே உள்ளது. அரசு சாரா நிறுவனங்கள் அதைச் செய்வது சரியல்ல. உணவின் தரத்தை சோதனை செய்வது அரசின் வேலை. மத்திய அரசின் இந்திய உணவு பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணையம் (FSSAI) உள்ளது.

ஹலால் சான்றிதழுடன் உணவுப் பொருட்களின் உற்பத்தி, விநியோகம் மற்றும் விற்பனைக்கு உத்தரபிரதேச அரசு தடை விதிப்பு செய்த‌விவகாரம் தொடர்பாக நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பதில் அளித்துள்ளார். மேலும் ரஃபேல் போர் விமானங்கள் வாங்குவது தொடர்பாக, அரசு ஒப்பந்தம் செய்து கொண்டதாகவும், அட்டவணைப்படி, ஒவ்வொரு விமானமும் இந்தியா வந்ததாக அவர் கூறினார்.

Vignesh

Next Post

ஒன்றரை மாத குழந்தைக்கு 40 இடங்களில் சூடு!… காய்ச்சலுக்கு வினோத வைத்தியம்!… ம.பி.யில் கொடூரம்!

Wed Nov 22 , 2023
மத்திய பிரதேசம் ஷாடோல் மாவட்டத்தில் உள்ள ஒரு பழங்குடி கிராமத்தில் நிமோனியா காய்ச்சல் தாக்கிய ஒன்றரை மாத பச்சை குழந்தையின் உடலில் 40 முறை பழுக்க காய்ச்சிய கம்பியால் சூடு வைத்த கொடூரம் நடந்துள்ளது. மத்திய பிரதேசம் ஷாடோல் மாவட்டத்தில் பழங்குடி மக்கள் வசிக்கும் பகுதியில் காய்ச்சலை குணப்படுத்த தீயில் பழுக்க காய்ச்சிய கம்பியால் உடலில் பலமுறை சூடு வைக்கும் பழக்கம் உள்ளது. இந்நிலையில் அங்குள்ள ஹர்தி கிராமத்தில் கடந்த […]

You May Like