காவிரி கரையோரத்தில் குடியிருக்கும் மக்கள், மாற்று இடத்திற்கு வந்தால் அவர்களுக்கு குடிசை மாற்று வாரியத்தின் மூலம் வீடுகள் கட்டித் தர அரசு தயாராக உள்ளதாக அமைச்சர் கே.என்.நேரு தெரிவித்துள்ளார்.
நாமக்கல் மாவட்டத்தில் செய்தியாளர்களிடம் பேசிய நகர்ப்புற துறை அமைச்சர் கே.என்.நேரு; தென்மேற்கு பருவமழை இந்த ஆண்டு அதிக அளவில் பொழிந்துள்ளது. நிவாரண முகாமில் தங்க வைக்கப்பட்டுள்ளவர்களிடம், தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் நேரடியாகக் கட்டுப்பாட்டு அறையிலிருந்து தொடர்பு கொண்டு வழங்கப்பட்ட வசதிகள் குறித்து கேட்டறிந்தார். முதலமைச்சர் உத்தரவிட்டபடி, அனைத்து இடங்களிலும் மீட்பு மற்றும் நிவாரணப் பணிகள் முழு வீட்டில் நடைபெற்று வருவதாக தெரிவித்தார்.
தொடர்ந்து பேசிய அமைச்சர்; காவிரி கரையோரத்தில் குடியிருக்கும் மக்கள், மாற்று இடத்திற்கு வந்தால் அவர்களுக்கு குடிசை மாற்று வாரியத்தின் மூலம் வீடுகள் கட்டித் தர அரசு தயாராக உள்ளது. இது குறித்து, தமிழக முதலமைச்சரிடம் தெரிவித்து, நிரந்தர தீர்வு காணப்படும் என தெரிவித்தார். மழையின் பாதிப்புகளை ஆராய்ந்து அரசு உரிய நடவடிக்கையை மேற்கொண்டு வருகிறது எதிர்க்கட்சிகள் சார்பில் வைக்கப்படும் குற்றச்சாட்டுகள் அனைத்தும் பொய் என தெரிவித்தார்.