fbpx

நகர்ப்புற மேம்பாட்டு வாரியத்தின் கீழ் வீடு பெற வேண்டுமா? இனி ஆதார் எண் கட்டாயம்!!

தமிழ்நாடு நகர்ப்புற மேம்பாட்டு வாரியத்தின் கீழ் செயல்படுத்தப்படும் திட்டங்களில் வீடு பெறுவதற்கு ஆதார் எண் கட்டாயம் என்று தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.

தமிழ்நாட்டில் 1970-ம் ஆண்டு தமிழ்நாடு குடிசைப்பகுதி மாற்று வாரியம் முன்னாள் முதலமைச்சர் மு கருணாநிதியால் தொடங்கி வைக்கப்பட்டது. இதன் நோக்கம் குடிசைப் பகுதிகளை மேம்படுத்துவதாகும். தமிழ்நாடு குடிசைப்பகுதி மாற்று வாரியம் தமிழ்நாட்டில் நகர்ப்புரத்தில் உள்ள ஏழைக் குடும்பங்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்தி, அவர்களுக்குக் குடிநீர். சுகாதாரம். மின்சாரம், கல்வி, மருத்துவ வசதி, திடக்கழிவு மேலாண்மை போன்ற நகர்ப்புர வசதிகளுடன் வீட்டுவசதிகளை ஏற்படுத்துவதற்காக செயல்பட்டு வருகிறது. 

பின்னர் இது தமிழ்நாடு நகர்ப்புர வாழ்விட மேம்பாட்டு வாரியம் என்று பெயர் மாற்றம் செய்யப்பட்டது. தமிழ்நாடு நகர்ப்புர வாழ்விட மேம்பாட்டு வாரியத்தின் மூலம் 92 திட்டப் பகுதிகளில் ரூ. 3,197.94 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்ட 28,824 அடுக்குமாடி குடியிருப்புகள் நகர்ப்புறத்தில் வசிக்கும் ஏழை மக்களுக்கு வழங்கப்பட்டுள்ளன. இந்நிலையில் தமிழ்நாடு நகர்ப்புற மேம்பாட்டு வாரியத்தின் கீழ் செயல்படுத்தப்படும் திட்டங்களில் வீடுகளை பெற ஆதார் எண் கட்டாயம் என தமிழக அரசு அரசாணை வெளியீட்டுள்ளது.

இதுகுறித்து தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ள அரசாணையில் கூறப்பட்டிருப்பதாவது, குடிசை பகுதியில் வாழ்பவர்களுக்கும், வீடு இல்லாதவர்களுக்கும் தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம் மூலம் வீட்டு வசதிகள் செய்து தரப்படுகின்றன. எனவே, ஆதார் சட்டப்படி வீடு பெற விண்ணப்பிக்கும் பயனாளிகள் ஆதார் எண்ணை வைத்திருக்க வேண்டும் அல்லது ஆதார் அங்கீகாரத்துக்கு உட்பட்டவர்களாக இருக்க வேண்டும். மேலும் நலத் திட்டங்களுக்காக பயனாளிகள் விண்ணப்பிக்கும் முன் ஆதார் எண்ணை பெற வேண்டும். இதற்கு அருகில் உள்ள ஆதார் மையத்தை நாடலாம். அல்லது திட்டத்தை செயல்படுத்தும் துறைகளே, பயனாளிகளுக்கு ஆதார் எண்ணுக்கு விண்ணப்பிக்கும் வழிமுறைகளை செய்து தரலாம்.

ஆதார் எண் கிடைக்கும்வரை, அடையாள சான்று அல்லது புகைப்படத்துடன் கூடிய வங்கிப் புத்தகம், பான் அட்டை, கடவுச்சீட்டு, குடும்ப அட்டை, வாக்காளர் அடையாள அட்டை, மகாத்மா காந்தி ஊரக வேலை உறுதித் திட்ட அட்டை, கிசான் அட்டை, ஓட்டுநர் உரிமம் உள்ளிட்ட சான்றுகளில் ஏதேனும் ஒன்றை சான்றாக அளிக்கலாம்.

மேலும், ஆதார் அங்கீகாரம் பெறும்போது, விரல் ரேகை பதிவில் சிக்கல் ஏற்பட்டால், முகத்தை ஸ்கேன் செய்வதன் மூலம் அங்கீகாரம் பெறலாம். அதேபோல் ஒருமுறை கடவுச்சொல் மூலமும் அங்கீகாரம் பெறலாம். அதுவும் சாத்தியப்படாவிட்டால், ஆதார் அட்டையில் உள்ள க்யூஆர் கோடு மூலம் உறுதி செய்யலாம். எனவே, இனி வீடு பெற விண்ணப்பிக்கும் பயனாளிகள் கட்டாயம் ஆதார் எண் வைத்திருக்க உத்தரவிடப்படுகிறது.

Read more ; ’தொண்டர்கள் பிரிந்து கிடப்பது கட்சிக்கு நல்லதல்ல’..!! ’விரைவில் சசிகலாவுடன் சந்திப்பு’..!! ஓபிஎஸ் அதிரடி அறிவிப்பு..!!

English Summary

The Government of Tamil Nadu has issued an ordinance making Aadhaar number mandatory for getting a house in the schemes implemented under the Tamil Nadu Urban Development Board.

Next Post

Taapsee | படு கவர்ச்சியான உடையில் நடிகை டாப்சி..!! திருமணத்திற்கு பிறகு இது தேவையா..? விளாசும் நெட்டிசன்ஸ்..!!

Mon Jul 1 , 2024
Even after marriage, actress Taapsee has posted many pictures on Instagram wearing very sexy clothes.

You May Like