ஆளுநர், அமைச்சரவை முடிவுக்கு உட்பட்டவர் என்று உச்சநீதிமன்றம் மீண்டும் உறுதி செய்துள்ளது..
வரும் 3-ம் தேதி பட்ஜெட் கூட்டத்தொடரை கூட்ட பஞ்சாப் மாநில அரசு முடிவு செய்திருந்தது.. மேலும் அம்மாநில ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்துக்கு சட்டப்பேரவை கூட்டத்தொரை கூட்டுவதற்கான கடிதம் அனுப்பப்பட்டது.. ஆனால் அம்மாநில ஆளுநர் இன்று காலை வரை பஞ்சாப் சட்டமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரை கூட்ட அனுமதி வழங்கவில்லை.. இந்நிலையில் பஞ்சாப் அரசு, இதுகுறித்து உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது.. மேலும் அவசர வழக்காக இந்த வழக்கை இன்றே விசாரிக்கை வேண்டும் என்று கோரிக்கை வைத்தது..
இதை தொடர்ந்து இன்று மாலை இந்த வழக்கு தலைமை நீதிபதி சந்திரசூட் தலைமையிலான அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது.. அப்போது ஆளுநர் பன்வரிலால் புரோஹித் தனது ஒப்புதலை அளித்துவிட்டதாக சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா கூறினார்.. எனவே அளுநரின் ஒப்புதல் கிடைத்ததால் இந்த வழக்கில் எந்த உத்தரவும் பிறப்பிக்கப்படவில்லை..
ஆனால் நீதிபதிகள் இந்த வழக்கில் சில முக்கியமான அறிவுரைகளை வழங்கினர்.. அதாவது ஆளுநர் அமைச்சரவையின் முடிவுகளுக்கு உட்பட்டவர் என்று மீண்டும் தெரிவித்துள்ளனர்.. ஆளுநரின் அதிகாரம் தொடர்பாக, ஏற்கனவே பல வழக்குகளில், அவர் அமைச்சரவையின் முடிவுகளுக்கு தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது என்று நீதிபதிகள் சுட்டிக்காட்டினர்..
மேலும் “ அமைச்சர்கள் குழு, ஒரு கூட்டத்தொடரை நடத்த வேண்டும் என்று கோரிக்கை வைத்தால், அதனை மாநில ஆளுநர் ஏற்க வேண்டும்… மாநில பட்ஜெட் கூட்டத்தொடரை கூட்டுவதை ஆளுநர் தாமதப்படுத்தியதை ஏற்க முடியாது.. அரசியல் சாசன கடமைகளை உணர்ந்து மாநில முதல்வர், ஆளுநர் செயல்பட வேண்டும்.. ஆளுநர் என்ன விவரங்களை கேட்கிறாரோ அதை முதலமைச்சர் அளிக்க வேண்டும்..” என்று நீதிபதிகள் தெரிவித்தனர்..