அரசு, அரசு உதவிபெறும் மற்றும் தனியார் பள்ளிகளில் 6 முதல் 12ம் வரை வகுப்புகளுக்கான அரையாண்டு தேர்வு அட்டவணை வெளியானது.
அரசு, அரசு உதவிபெறும் மற்றும் தனியார் பள்ளிகளில் 6 முதல் 12ம் வரை வகுப்புகளுக்கான அரையாண்டு தேர்வு அட்டவணை வெளியானது. தமிழக பள்ளிக்கல்வி பாடத்திட்டத்தில் 1 முதல் 12 ம் வகுப்பு வரை பயிலும் மாணவ, மாணவிகளுக்கான பள்ளி வேலை நாட்கள், தேர்வுகள், விடுமுறை உள்ளிட்ட விவரங்கள் அடங்கிய நாள்காட்டி 2018-ம் ஆண்டு முதல் வெளியிடப்பட்டு வருகிறது.
அந்த வகையில், நடப்பு ஆண்டுக்கான அரசு, அரசு உதவி பெறும் மற்றும் தனியார் பள்ளிகளில் 6 முதல் 12ம் வரை வகுப்புகளுக்கான அரையாண்டு தேர்வு அட்டவணையை பள்ளிக்கல்வித் துறை வெளியிட்டுள்ளது. இதன்படி அரையாண்டுத் தேர்வு டிசம்பர் 16 துவங்கி 23ம் தேதி வரை நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. டிசம்பர் 24ம் தேதி முதல் 2025 ஜனவரி 1ம் தேதி வரை அரையாண்டு விடுமுறை விடப்படுவதாகவும், ஜனவரி 2ம் தேதி பள்ளிகள் மீண்டும் திறக்கப்படும் என்றும், அப்போது மூன்றாம் பருவம் தொடங்கும் என்றும் பள்ளி கல்வித்துறை சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.
அரையாண்டு தேர்வு முடிந்து, விடுமுறை டிசம்பர் 24 ஆம் தேதி முதல் தொடங்கும் நிலையில், ஜனவரி 1 ஆம் தேதி ஆங்கில புத்தாண்டு வரை விடுமுறை விடப்படுவதால் கிறிஸ்துமஸ் விடுமுறையையும் சேர்த்து 9 நாட்கள் அரையாண்டு விடுமுறை கிடைக்கும்.
Read more ; “நான் தான் முதல்ல பலாத்காரம் பண்ணுவேன்” தந்தையின் கண் முன் சிறுமிக்கு நேர்ந்த கொடூரம்…