fbpx

தமிழகமே…! இன்று மற்றும் நாளை தடையின்றி மின்சாரம் வழங்க உத்தரவு…!

இன்று மற்றும் நாளை தடையில்லா மின்சாரம் வழங்குவதை அனைத்து உறுதி செய்ய வேண்டும் என தமிழ்நாடு மின்சார வாரியம் அறிவுறுத்தி உள்ளது.

மக்களவை தேர்தல் கடந்த ஏப்ரல் 19 முதல் ஜூன் 1 வரை 7 கட்டங்களாக நடத்தி முடிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், நாடு முழுவதும் வாக்கு எண்ணிக்கை இன்று நடைபெறுகிறது. இன்று காலை 8 மணிக்கு வாக்கு எண்ணிக்கை தொடங்குகிறது. முதலில் 8 மணிக்கு தபால் வாக்கு எண்ணிக்கை தொடங்கும். 8.30 மணி முதல், மின்னணு இயந்திரங்களின் வாக்கு எண்ணிக்கை நடைபெறும்.

தபால் வாக்கு எண்ணிக்கை முடிவை அறிவித்த பிறகே, மின்னணு இயந்திர இறுதி சுற்று வாக்கு எண்ணிக்கை முடிவை அறிவிக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. இந்த நிலையில் தமிழகத்தில் வாக்கு எண்ணும் மையங்களில் இன்று மற்றும் நாளை தடையில்லா மின்சாரம் வழங்குவதை அனைத்து உறுதி செய்ய வேண்டும் என தமிழ்நாடு மின்சார வாரியம் அறிவுறுத்தி உள்ளது.

இது குறித்து மின்வாரியம் வெளியிட்ட வழிகாட்டி நெறிமுறை: “துணை மின்நிலையத்தில் உள்ள ஷிப்ட் ஆபரேட்டர்கள், சப்ளையை கண்காணித்தல், பராமரித்தல் மற்றும் அவசரகால செயல்பாடுகள் ஏதேனும் இருந்தால், கட்டுபாட்டு ஒருங்கிணைத்து விரைவாக மறு சீரமைப்பதற்கான அவசர நடவடிக்கைகளைக் கையாள்வதற்கு பணி நேரங்களில் அதிக விழிப்புடன் இருக்க வேண்டும் என தெரிவித்து உள்ளது.

Vignesh

Next Post

2 தீவிரவாதிகள் என்கவுன்டரில் சுட்டுக்கொலை!… 9 மணிநேரம் நீடித்த துப்பாக்கிச்சூடு!

Tue Jun 4 , 2024
Pulwama Encounter: ஜம்மு-காஷ்மீர் மாநிலம் புல்வாமா மாவட்டத்தில் திங்கள்கிழமை (ஜூன் 3) பாதுகாப்புப் படையினருடன் நடந்த என்கவுன்டரில் லஷ்கர்-இ-தொய்பாவின் கமாண்டர் உட்பட இரண்டு பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர். ஜம்மு-காஷ்மீர் மாநிலம் புல்வாமா மாவட்டம் நிஹாமா பகுதியில் பயங்கரவாதிகள் பதுங்கி இருப்பதாக உளவுத்துறைக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து அப்பகுதியில் உள்ள வீட்டில் சோதனையில் ஈடுபட்ட பாதுகாப்புப் படையினர், துப்பாக்கிச்சூடு நடத்தினர். இதில் லஷ்கர்-இ-தொய்பாவின் கமாண்டர் உட்பட இரண்டு பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர். என்கவுண்டரில் சுட்டுக்கொல்லப்பட்ட […]

You May Like