fbpx

இஸ்ரேல் ராணுவத்தின் உளவு பிரிவு தலைவர் திடீர் ராஜினாமா!

அக்டோபர் 7 தாக்குதலைத் தடுக்கத் தவறியதற்காக இஸ்ரேலிய ராணுவ உளவுத்துறைத் தலைவர் ஹலிவா பதவி விலகினார்

ஹமாஸ் அமைப்பினர் கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் 7 ஆம் தேதி திடீரென காசா எல்லையைத் தாண்டி இஸ்ரேல் நாட்டிற்குள் நுழைந்தனர். இஸ்ரேல் நாட்டிற்குள் நுழைந்த அவர்கள் கண்ணில் தென்பட்டவர்களையெல்லாம் துப்பாக்கியால் சுட்டுக்கொன்றனர். மேலும், 250 பேரை பிணைக்கைதிகளை பிடித்துக் சென்றனர்

இதனால் ஆத்திரம் அடைந்த இஸ்ரேல், ஹமாஸ்க்கு எதிராக காசா மீது தாக்குதல் நடத்திய தொடங்கியது. ஏழு மாதங்களாக இஸ்ரேல் காசா மீது தாக்குதல் நடத்தி வருகிறது. இதனால் லட்சக்கணக்கானோர் தங்களது குடியிருப்பை விட்டு வெளியேறி உள்ளனர். அவர்களில் பலர் அண்டை நாடுகளான எகிப்து, லெபனான் எல்லையில் உள்ள அகதிகள் முகாமில் தங்கி வருகின்றனர்.ஆனால் அகதிகள் முகாமை குறிவைத்தும் இஸ்ரேல் அவ்வப்போது தாக்குதல் நடத்துகின்றது. இரு தரப்புக்கும் இடையே நடைபெற்று வரும் இந்த மோதலில் 34 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டுள்ளனர்.

இஸ்ரேல் எல்லைக்குள் ஹமாஸ் அமைப்பினர் திடீரென புகுந்து தாக்குதல் நடத்தியதற்கு, இஸ்ரேல் ராணுவத்தின் உளவுத்துறை தோல்வியும் முக்கிய காரணம் என குற்றம் சாட்டப்பட்டு வந்தது. இந்த நிலையில் இன்று ராணுவத்தின் உளவுத்துறை தலைவர் மேஜர் ஜெனரல் அஹரோன் ஹலிவா தனது தலைவர் பதவியை ராஜினாமா செய்துள்ளார்.

இதுகுறித்து இஸ்ரேல் ராணுவம் வெளியிட்டுள்ள அறிக்கையில், தலைமை பொறுப்பு பதவியில் இருந்து என்னை விடுவிக்குமாறு ஹலிவா கேட்டுக்கொண்டார். ஹலிவாவின் பதவி விலகல் கோரிக்கையை இராணுவத் தளபதி ஏற்றுக்கொண்டதாகவும், அவரது சேவைக்கு நன்றி தெரிவிப்பதாகவும் இராணுவம் அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளது.

Next Post

சொத்து வரி செலுத்திட்டீங்களா..? தாமதமானால் என்ன நடக்கும் தெரியுமா..? சென்னை மாநகராட்சி அதிரடி உத்தரவு..!!

Mon Apr 22 , 2024
சொத்து வரி தொடர்பாக முக்கிய அறிவுறுத்தல் ஒன்றை சென்னை மாநகராட்சி பிறப்பித்துள்ளது. இது தொடர்பாக சலுகை ஒன்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. சென்னை மாநகராட்சியை பொறுத்தவரை 13.5 லட்சம் சொத்து உரிமையாளர்கள் இருக்கிறார்கள். இவர்களிடம் இருந்து அரையாண்டுக்கு சுமார் ரூ.850 கோடி வீதம், ஆண்டுக்கு ரூ.1,700 கோடி வசூலிக்கப்பட்டு வருகிறது. சொத்து வரியை செலுத்தாத உரிமையாளர்கள் கூடுதலாக ஒரு சதவீதம் தனி வட்டியுடன் சொத்துவரி செலுத்த வேண்டும். அதேபோல, சொத்துவரி மற்றும் தொழில்வரியை […]

You May Like