fbpx

மனைவியின் நடத்தையில் சந்தேகமா…..! தலையில் கல்லை போட்டு கொலை செய்த கணவன் மாயம் திருச்சி அருகே பயங்கரம்…..!

திருச்சி பொன்மலைப்பட்டி பொன்னேரிபுரத்தை சேர்ந்தவர் சதீஷ்குமார்(40) பெயிண்டராக வேலை பார்த்து வரும் இவரது மனைவி சபுராபீவி என்கின்ற நிஷா (35) இருவரும் வெவ்வேறு மதத்தைச் சார்ந்தவர்கள் ஆனால் இவர்கள் இருவரும் காதலித்து திருமணம் செய்து கொண்டனர். இந்த தம்பதிகளுக்கு 2 மகன்களும் ஒரு மகளும் இருக்கின்றனர். சதீஷ்குமார் மீது காவல் நிலையத்தில் அடிதடி உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் நிலுவையில் இருப்பதாக சொல்லப்படுகிறது.

இந்த சூழ்நிலையில் தான் சதீஷ்குமார் தன்னுடைய மனைவி நிஷாவுடன் பொன்மலை பகுதியில் உள்ள ஒரு பள்ளி அருகே ரயில்வேவுக்கு சொந்தமான பாழடைந்த கட்டிடத்திற்கு அழைத்துச் சென்றிருக்கிறார். அங்கே நேற்று முன்தினம் இரவு அவர்களுக்குள் திடீரென்று தகராறு ஏற்பட்டிருக்கிறது. இதில் ஆத்திரம் கொண்ட சதீஷ்குமார் தன்னுடைய மனைவியை கீழே தள்ளி அவரது கழுத்தை சேலையால் நெரித்து உள்ளார்.

அதன் பிறகு அவருடைய தலையில் கல்லை போட்டு கொலை செய்து விட்டு அங்கிருந்து தப்பிச் சென்றார். இந்த நிலையில் நிஷா வீட்டில் இல்லாததால் அவரது உறவினர்கள் பொன்மலை காவல் நிலையத்தில் புகார் வழங்கினர் ஆகவே காவல்துறையினர் சந்தேகத்தின் அடிப்படையில், அந்த பாழடைந்த கட்டிடத்திற்கு சென்று பார்வையிட்டனர். அப்போது அங்கு நிஷா கொலை செய்யப்பட்டு ரத்த வெள்ளத்தில் பிணமாக கிடந்துள்ளார், இதை கண்டு காவல்துறையினரும் அதிர்ந்து போயினர்.

ஆகவே காவல்துறையினர் அவரது உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனை அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் குறித்து பொன்மலை காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். அவர்களின் முதல் கட்ட விசாரணையில் நடத்தையில் சந்தேகப்பட்டு சதீஷ்குமார் மனைவியை அவரிடம் இந்த கட்டிடத்திற்கு அழைத்துச் சென்று பின்னர் கொலை செய்தாரா? அல்லது வேறு ஏதாவது காரணம் இருக்கிறதா? என்று காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.அதோடு தப்பிச்சென்ற சதீஷ்குமாரை காவல்துறையினர் தீவிரமாக தேடி வருகின்றனர்.

Next Post

நிதி நிறுவனத்தில் பணத்தை கையாடல் செய்த நபர்…..! ஆத்திரம் கொண்ட முதலாளி செய்த பயங்கரம் இறுதியில் ஊழியருக்கு ஏற்பட்ட பரிதாபம்….!

Wed Jul 5 , 2023
மயிலாடுதுறை பகுதியைச் சேர்ந்தவர் பாபுஜி (50) இவர் சென்னை நொளம்பூர் எஸ் எம் பி கார்டன் பகுதியை சேர்ந்த வெங்கட்ராமன் என்பவர் நடத்தி வந்த நிதி நிறுவனத்தில் பணம் வசூலிக்கும் ஏஜெண்டாக வேலை பார்த்து வந்தார் இந்த நிலையில் பாபுஜி அந்த நிறுவனத்தில் பணத்தை கையாடல் செய்ததாக சொல்லப்படுகிறது. இதன் காரணமாக, வெங்கட்ராமனுக்கும், பாபுஜிக்கும் இடையே மனக்கசப்பு ஏற்பட்டுள்ளது. இதற்கு நடுவே வெங்கட்ராமன் தரப்பைச் சார்ந்தவர்கள் கடந்த பிப்ரவரி மாதம் […]

You May Like