fbpx

மனைவியின் செல்போன் எண்ணை பகிர்ந்த கணவன்..! விடிய விடிய ஆபாச வீடியோ..! அதிர்ச்சி சம்பவம்

மனைவியின் செல்போன் எண்ணை நண்பர்களுக்கு பகிர்ந்து ஆபாசமாக பேச சொன்ன கணவன், போலீசிடம் வசமாக சிக்கிய சம்பவம் உத்தரப்பிரதேசத்தில் அரங்கேறியுள்ளது.

உத்தரப்பிரதேச மாநிலம் கான்பூர் மாநிலத்தைச் சேர்ந்தவர் ஆகாஷ். இவருக்கும் அந்த பகுதியைச் சேர்ந்த இளம்பெண் ஒருவருக்கும் கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன் திருமணம் நடந்துள்ளது. இந்நிலையில், கணவர் ஆகாஷ் திருமணமான பின்பும் வேலைக்கு செல்லாமல் ஊர்சுற்றி வந்துள்ளார். இதனால் கணவன்-மனைவிக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. ஒரு முறை ஏற்பட்ட தகராறின்போது தனது மனைவியை வீட்டை விட்டு துரத்தியுள்ளார் ஆகாஷ். இதனால், ஆத்திரமடைந்த மனைவி ஆகாஷ் மீதும் அவரது குடும்பத்தினர் மீதும் போலீசில் புகார் கொடுத்துள்ளார்.

மனைவியின் செல்போன் எண்ணை பகிர்ந்த கணவன்..! விடிய விடிய ஆபாச வீடியோ..! அதிர்ச்சி சம்பவம்

இந்நிலையில், புகாரை வாபஸ் வாங்குமாறு மனைவியை ஆகாஷும் அவரது குடும்பத்தினரும் மிரட்டியதாக தெரிகிறது. இதற்கு அவர் மறுத்துள்ளார். இதனால் கடும் கோபமடைந்த ஆகாஷ், மனைவியை பழிவாங்குவதற்காக, அவரின் செல்போன் எண்ணை நண்பர்களுக்கு புகைப்படத்துடன் பகிர்ந்து இந்த பெண் விபச்சாரி என அனுப்பியுள்ளார். இதையடுத்து, ஆகாஷின் நண்பர்கள் அவரது மனைவியிடம் ஆபாசமாக பேசத்தொடங்கியுள்ளனர். இப்படியே தினமும் ஆபாச மெசேஜ், ஆபாச வீடியோக்களை அவர்கள் அனுப்பி வைத்ததால், கடும் மன உளைச்சல் அடைந்த ஆகாஷின் மனைவி போலீசில் புகார் அளித்தார்.

மனைவியின் செல்போன் எண்ணை பகிர்ந்த கணவன்..! விடிய விடிய ஆபாச வீடியோ..! அதிர்ச்சி சம்பவம்

இதையடுத்து, அவர்கள் மேற்கொண்ட விசாரணையில், கணவனே இந்த மோசமான செயலை செய்தது தெரியவந்தது. தன் மீது கொடுத்த புகாரை வாபஸ் பெறுவதற்காகவே இது போன்ற காரியத்தில் ஆகாஷ் ஈடுபட்டது அம்பலமானது. இதையடுத்து அவரது நண்பர்களை அழைத்து விசாரித்த போலீசார், மன்னிப்பு கேட்டதை அடுத்து ஆகாஷையும் நண்பர்களையும் எச்சரித்து அனுப்பி வைத்தனர்.

Chella

Next Post

திரைப்பட எழுத்தாளர் சங்க தேர்தலில் பாக்யராஜ் 192 வாக்குகள் பெற்று வெற்றி….. நடிகர் விஜயின் தந்தை சந்திரசேகர் தோல்வி…..

Sun Sep 11 , 2022
தென்னிந்திய திரைப்பட எழுத்தாளர் சங்கத் தேர்தலில் தலைவர் பதவிக்கு போட்டியிட்ட நடிகர் பாக்கியராஜ் அதிக வாக்குகள் பெற்று வெற்றி பெற்றுள்ளார். சென்னையில் திரைப்பட எழுத்தாளர் சங்க தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று காலை தொடங்கியது. வடபழனியில் உள்ள இசை யூனியனில் தொடங்கிய தேர்தல் மாலை 4 மணி வரை நடைபெற்றது. இத்தேர்தலில் பாக்கியராஜ் மற்றும் நடிகர் விஜயின் தந்தை எஸ்.ஏ. சந்திரசேகர் ஆகியோர் போட்டியிட்டனர். தேர்தல் முடிந்தவுடன் வாக்குகள் எண்ணப்பட்டது. இதன் […]

You May Like