திருச்சியில் பிஎஸ்என்எல் ஊழியர் ஒருவர் தனது மனைவியை திடீரென நடுரோட்டில் வைத்து சரா மாறியாக தாக்கியதால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது இது தொடர்பாக காவல்துறையினரத் நபரை கைது செய்து விசாரணை செய்து வருகின்றனர். திருச்சி மாவட்டத்தில் உள்ள மணிகண்டன் பகுதியைச் சேர்ந்தவர் பிஎஸ்என்எல் ஒப்பந்தத் ஊழியரான விக்னேஸ்வர். இவர் பிஎஸ்என்எல் நிறுவனத்தில் ஒப்பந்த ஊழியராக பணியாற்றி வருகிறார். இவரது மனைவி திருச்சியில் உள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் பணியாற்றி வருவதாக தெரிகிறது. விக்னேஸ்வர் தினமும் தனது பணி முடிந்து மனைவியையும் தனியார் மருத்துவமனை சென்று அழைத்துக் கொண்டு வீட்டிற்கு செல்வது வழக்கம். இந்நிலையில் சம்பவம் நடந்த தினத்தன்று வழக்கம்போல் தனது மனைவியை அவர் வேலை செய்யும் தனியார் மருத்துவமனை சென்று அழைத்துச் சென்று இருக்கிறார்.
அப்போது திடீரென நடு ரோட்டில் வைத்து தனது மனைவியை சரமாறியாக அடிக்க துவங்கியுள்ளார். இதனைக் கண்டு அங்கிருந்த பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்தனர். இதனைப் பார்த்து அங்கிருந்த போலீசார் தடுக்க சென்று இருக்கின்றனர். அப்போது அவர்களையும் சரமாறியாக தாக்கி இருக்கிறார் விக்னேஷ்வர். இதனால் அதிர்ச்சி அடைந்த காவல்துறையினர் சுதாகரித்து அந்த நபரை கைது செய்தனர். மேலும் அவருடைய மனைவியை பத்திரமாக வீட்டுக்கு அனுப்பி வைத்தனர். இதனைத் தொடர்ந்து விக்னேஸ்வரிடம் விசாரணை செய்ததில் அவர் உச்சகட்ட போதையில் இருப்பது தெரிய வந்தது. அளவுக்கு அதிகமான மது போதையில் இருந்த அவர் போதையின் காரணமாக தனது மனைவியை தாக்கி இருப்பதும் மேலும் அதனை தடுக்க வந்த காவல்துறையினரையும் தாக்கியது தெரியவந்துள்ளது. இதனைத் தொடர்ந்து அவர் மீது வழக்கு பதிவு செய்த போலீசார் அவரை சிறையில் அடைத்தனர்.