fbpx

காதல் மனைவியை கத்தியால் குத்திக்கொன்ற கணவன்..!! திருமணத்தை மீறிய உறவால் விபரீதம்..!!

கோவை மாவட்டம் சூலூரை அடுத்த பள்ளபாளையம் பகுதியில் வசித்து வருபவர் கணேசன். இவர் கூலித் தொழிலாளியாக பணியாற்றி வருகிறார். இவரது மனைவி நிவேதா (24). கடந்த சில ஆண்டுகளுக்கு முன் இருவரும் காதலித்து சாதிமறுப்பு திருமணம் செய்து கொண்டனர். இவர்களுக்கு 2 குழந்தைகள் உள்ள நிலையில், நிவேதாவுக்கு முருகன் என்பவருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து கணேசனுக்கு தெரியவந்ததால், நிவேதாவை கண்டித்துள்ளார். கணவர் பலமுறை கண்டித்தும் கேட்காமல் நிவேதா தொடர்ந்து முருகனுடன் பழகி வந்துள்ளார். இந்நிலையில், நேற்று மாலை பணி முடித்து கணேசன் வீடு திரும்பிய போது, நிவேதாவுடன் முருகன் தனிமையில் இருந்ததாகவும், கணேசனைப் பார்த்ததும் அங்கிருந்து தப்பி ஓடியதாகவும் கூறப்படுகிறது.

இதனால் ஆத்திரமடைந்த கணவர் கணேசன், நிவேதாவுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். பின்னர், வாக்குவாதம் முற்றியதில் ஆத்திரத்தின் உச்சிக்கு சென்ற கணேசன், சமையலுக்கு பயன்படுத்தும் கத்தியைக் கொண்டு தனது காதல் மனைவியை உடல் முழுவதும் சரமாரியாக குத்திவிட்டு, அங்கிருந்து தப்பிச் சென்றார். நிவேதாவின் அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் வந்து பார்த்த போது நிவேதா உடல் முழுவதும் காயங்களுடன் ரத்த வெள்ளத்தில் சடலமாக கிடந்தார். பின்னர், சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார், நிவேதாவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்துள்ள காவல் துறையினர், தப்பியோடிய நிவேதாவின் கணவர் கணேசனை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Chella

Next Post

உடலுறவுக்கு மறுத்த மனைவியை பிறப்புறுப்பில் கொடூரமாக தாக்கி கொலை செய்த காம கொடூரன்….! சத்தீஸ்கரில் கொடூரம்……!

Thu Apr 20 , 2023
சத்தீஸ்கர் மாநிலத்தில் உள்ள ஜஷ்பூர் மாவட்டத்தில் இருக்கின்ற ரவ்னி கிராமத்தைச் சேர்ந்த நபர் சங்கர் ராம் இவருடைய மனைவி ஆஷா பாய் இந்த நிலையில் சங்கர் ராம் மது போதைக்கு அடிமையானவர் என்று சொல்லப்படுகிறது. இந்த சம்பவம் நடைபெற்ற கடந்த 17ஆம் தேதி இரவு ஷங்கர் மது குடித்துவிட்டு வீட்டிற்கு வந்துள்ளார். இந்த சூழ்நிலையில் தான் தன்னுடன் பாலியல் உறவில் ஈடுபட வேண்டும் என தன்னுடைய மனைவி ஆஷாபாயிடம் தெரிவித்துள்ளார். […]

You May Like