fbpx

தினமும் குடித்து விட்டு வந்து அடித்த கணவனை; கடப்பாரையால் அடித்துக் கொன்ற மனைவி..!!

ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம் அடுத்த உரியூர் அம்பேத்கர் தெருவில் வசிப்பவர் சீராளன். இவர் அந்த பகுதியில் சவுண்ட் சர்வீஸ் வைத்து நடத்தி வந்தார். இவரது மனைவி ஷோபனா. இவர்களுக்கு ஒரு மகனும் ஒரு மகளும் இருக்கின்றனர். இந்த நிலையில் சீராளனுக்கு மது குடிக்கும் பழக்கம் உள்ளது. இதனால் தினமும் குடித்து விட்டு வந்து போதையில் மனைவியை அடித்து துன்புறுத்தியுள்ளார்.

இதனால் கணவன் மனைவி இருவருக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் நேற்று இரவு மீண்டும் குடித்துவிட்டு போதையில் வந்த சீராளன், மனைவி ஷோபனாவிடம் தகராறு செய்துள்ளார். இதனால் இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது. இதில் ஆத்திரமடைந்த ஷோனா வீட்டில் இருந்த மூன்றடி உயர கடப்பாரையால் கணவனின் தலையில் அடித்துள்ளார். இதனால் அந்த இடத்திலேயே சீராளன் உயிரிழந்தார். இதை தொடர்ந்து ஷோபனா தனது பிள்ளைகள் இருவரையும் திருவள்ளூர் மாவட்டம் மப்பேடு அருகே இருக்கும் தனது தாய் வீட்டிற்கு அழைத்து சென்று தங்கையிடம் ஒப்படைத்துவிட்டு மப்பேடு காவல் நிலையத்தில் இன்று காலை சரணடைந்தார்.

இதற்கிடையே சீராளன் கொலை செய்யப்பட்ட தகவல் அறிந்து தக்கோலம் காவல்துறையினர் அவரது உடலை மீட்டு உடற்கூறு ஆய்விற்காக வேலூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் மப்பேடு காவல்துறையினர் கொலை வழக்கில் ஷோபனா என்பவர் சரண் அடைந்திருப்பதாக தக்கோலம் காவல்துறையினருக்கு தகவல் அளித்தனர். அதன் அடிப்படையில் தக்கோலம் காவல்துறையினர் ஷோபனாவை காவல் நிலையம் அழைத்து வந்து விசாரணை நடத்தினர்.

காவல்துறையினர் விசாரணையில் ஷோபனா தனது கணவர் மற்றொரு பெண்ணுடன் தொடர்பு இருப்பதை தெரிந்து பலமுறை எச்சரித்தும் அதை பொருட்படுத்தாமல் மேலும் குடித்துவிட்டு தினமும் குழந்தைகளையும், தன்னையும்  அடித்து துன்புறுத்தி வந்ததாக கூறினார். இதைத் தொடர்ந்து வழக்கு பதிவு செய்த தக்கோலம் காவல்துறையினர் சோபனாவை அரக்கோணம் நடுவர் கோர்ட்டில் ஆஜர்படுத்தி வேலூர் மத்திய ஜெயிலில் அடைத்தனர். கணவனை மனைவியே கடப்பாரையால் தாக்கி கொலை செய்த சம்பவம் தக்கோலம் பகுதியில் பரப்பரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Rupa

Next Post

மத்திய அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி உயர்வு..!! எத்தனை சதவிகிதம் தெரியுமா..?

Wed Sep 28 , 2022
மத்திய அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படியை 4 சதவிகிதமாக உயர்த்தி வழங்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. டெல்லியில் இன்று மத்திய அமைச்சரவைக் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு பிறகு செய்தியாளர்களை சந்தித்த மத்திய அமைச்சர் அனுராக் தாக்கூர், “அகமதாபாத் மற்றும் சிஎஸ்எம்டி, மும்பை ஆகிய 3 முக்கிய ரயில் நிலையங்களை மீண்டும் மேம்படுத்துவதற்கான இந்திய ரயில்வேயின் முன்மொழிவுக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. இந்த திட்டமானது சுமார் 10,000 கோடி ரூபாய் […]

You May Like