ரயில் நிற்பதற்கு முன்பாகவே, ஓடும் ரயிலில் இருந்து இறங்க முயன்ற நபர் தவறி கீழே விழுந்து ரயிலுக்கு அடியில் சிக்கிக் கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பல்லவன் விரைவு ரயிலில் ஜெயச்சந்திரன் என்பவர் பயணம் செய்துள்ளார்.. திருச்சி ரயில் நிலையம் வந்ததுமே, எழுந்து நின்று கொண்ட ஜெயச்சந்திரன், ரயில் நிற்பதற்கு முன்பாக இறங்கமுயன்றுள்ளார். இதில், திடீரென கால் தவறி விழுந்துவிட்டார்.. பிளாட்பாரத்துக்கும், ரயிலுக்கும் இடையில் ஜெயச்சந்திரன் சிக்கிக்கொண்டதை பார்த்து பயணிகள் அனைவரும் பதறினார்கள்.
இதையடுத்து உடனடியாக ரயில் நிலைய போலீசாருடன் சக பயணிகளும், இணைந்து ஜெயச்சந்திரனை மீட்க உதவினார்கள். இறுதியில், சிறிது நேர பரபரப்புக்குப் பிறகு, ரயிலுக்கு அடியில் சிக்கிக் கொண்டிருந்த ஜெயச்சந்திரனை பாதுகாப்பாக மீட்டனர்.. இதனால் திருச்சி ரயில்வே சந்திப்பில் சிறிது நேரம் பதற்றமான சூழல் நிலவியது. ரெயில் உடனடியாக நிறுத்தப்பட்டதால் பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது.
படுகாயங்களுடன் மீட்கப்பட்ட ஜெயச்சந்திரன் உடனடியாக மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.. அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டதையடுத்து, தற்போது உடல்நலக்குறைவால் உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ரயிலில் விபத்தில் சிக்கிய ஜெயச்சந்திரன், ஓய்வு பெற்ற ரயில்வே அதிகாரி என்பது குறிப்பிடத்தக்கது.
Read more ; பகீர்..!! கல்லூரி முடிந்து வீடு திரும்பிய நர்சிங் மாணவி பலாத்காரம்..!! அதிர வைக்கும் பின்னணி..!!