திருச்சி மாவட்ட பகுதியில் அண்ணாநகரை சேர்ந்த பாரதி (24). இவர் வேன் டிரைவர் வேலைபார்த்து வருகிறார். இவரது மனைவி நந்தினி. இருவருக்கும் திருமணமாகி சில நாட்களுக்கு முன்னர் அழகான பெண் குழந்தை ஒன்று பிறந்துள்ளது.
இந்த நிலையில், நந்தினியை கவனித்துக் கொள்வதற்காக பாரதியின் வீட்டிற்கு வந்த மனைவியின் தங்கை வந்துள்ளார். 17 வயதுள்ள இந்த சிறுமியை வற்புறுத்தி பாரதி பலமுறை பாலியல் பலாத்காரம் செய்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
சில நாட்களில் வயிறு வலி ஏற்பட்டதை தொடர்ந்து உறவினர்கள் சிறுமியை மருத்துவமனைக்கு அழைத்துச்சென்று பரிசோதனை செய்ததில் சிறுமி 4 மாத கர்ப்பிணியாக இருப்பது தெரியவந்தது. இதனை தொடர்ந்து திருச்சியில் உள்ள அரசு பொது மருத்துவமனையில் அந்த சிறுமியின் கர்ப்பத்தை கலைத்துள்ளனர்.
இதனையடுத்து குழந்தைகள் நல பாதுகாப்பு மையத்திற்கு தகவல் அளித்துள்ளனர். மேலும் மகளிர் காவல் துறையினர் போக்சோ வழக்கின் கீழ் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர். அந்த பகுதியில் இந்த நிகழ்ச்சி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.