fbpx

நள்ளிரவில் அழுத கைக்குழந்தை மனைவி மீது இருந்த கோபத்தால்…..! குழந்தையை தூக்கி வீசிய கணவன், இறுதியில் குழந்தைக்கு ஏற்பட்ட பரிதாபம்…..!

காஞ்சிபுரம் அருகே, குழந்தைக்கு பால் கொடுக்காத மனைவியின் மீது இருந்த கோபத்தில், 2 மாத கைக்குழந்தையை கணவன் தரையில் தூக்கி வீசியதால், குழந்தை உயிரிழந்த பரிதாப சம்பவம் நடைபெற்று உள்ளது.

காஞ்சிபுரத்தில் ஆந்திர மாநிலத்தை பூர்வீகமாகக் கொண்ட சுரேஷ் (25), இவருடைய மனைவி அஞ்சலி (23) என்ற தம்பதிகள் வசித்து வந்தனர். இந்த தம்பதிகளுக்கு 3️ குழந்தைகள் இருந்த நிலையில், சென்ற 10 தினங்களாக, தம்பதிகள் இரண்டு பேரும், திருவள்ளுவர் பெரியகுப்பம் ரயில்வே மேம்பாலத்திற்கு கீழ், தங்கி, கூலி வேலை பார்த்துக்கொண்டு, பிளாஸ்டிக், இரும்பு போன்ற பொருட்களை கடையில் விற்பனை செய்யும் பணியை செய்து வந்தனர்.

இந்த தம்பதிகளின் கடைசி குழந்தையான கங்கோத்ரி பிறந்து, 2️ மாதமே ஆன நிலையில், அடிக்கடி பசியால், அழுவதை வழக்கமாக கொண்டிருந்தது. ஆகவே கடந்த 5ம் தேதி நள்ளிரவு, குழந்தை திடீரென்று பசியால், அழுதுள்ளது. அப்போது குழந்தைக்கு பால் கொடுக்குமாறு சுரேஷ் தன்னுடைய மனைவியை வற்புறுத்தி இருக்கிறார்.

இதன் காரணமாக, கணவன், மனைவி இருவருக்கிடையில், தகராறு ஏற்பட்டிருக்கிறது. அப்போது, போதையில் இருந்த சுரேஷ், மனைவியின் மீது இருந்த கோபத்தில், 2 மாத கை குழந்தையை தூக்கி தரையில் அடித்திருக்கிறார்.

இதில், அந்த கைக்குழந்தைக்கு தலையில், பலத்த காயம் ஏற்பட்டதன் காரணமாக, உடனடியாக, திருவள்ளூர் மாவட்ட ,அரசு மருத்துவ கல்லூரி, மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். ஆனால், அங்கு அனுமதிக்கப்பட்ட 2️ மணி நேரத்தில், அந்த கை குழந்தை பரிதாபமாக உயிரிழந்தது.

இது தொடர்பாக, தகவல் அறிந்த, திருவள்ளூர் துணைக்காவல் ஆய்வாளர் சத்திய நாராயணன் மற்றும் காவலர் அன்பரசு உள்ளிட்டோர் சம்பவ இடத்திற்கு சென்று, 2️ மாத கைக்குழந்தையை தரையில் தூக்கி அடித்து, கொலை செய்த குழந்தையின் தந்தை, சுரேஷை கைது செய்து, விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Next Post

6 பிப்ரவரி 2023 முதல் இந்தியாவில் E20 பெட்ரோல் விற்பனை...! மத்திய அரசு தகவல்...!

Tue Aug 8 , 2023
E20 (20% எத்தனால் கலந்த) பெட்ரோல் என்பது 20% நீரற்ற எத்தனால் மற்றும் 80% மோட்டார் பெட்ரோல் எரிபொருள் அளவு ஆகியவற்றின் கலவையாகும். இறக்குமதி சார்புநிலையைக் குறைத்தல், வேலைவாய்ப்பை உருவாக்குதல், விவசாயிகளுக்கு சிறந்த ஊதியத்தை வழங்குதல், அதனுடன் தொடர்புடைய சுற்றுச்சூழல் நன்மைகளுக்காக, சிறந்த கழிவு மேலாண்மை நடைமுறைகளை ஊக்குவித்தல் போன்ற பரந்த நோக்கங்களுடன் அரசு உயிரி எரிபொருளை ஊக்குவித்து வருகிறது. பொதுத்துறை எண்ணெய் சந்தைப்படுத்தல் நிறுவனங்கள் (ஓஎம்சி) 6 பிப்ரவரி […]

You May Like