மதுரை மாவட்டம் பேரையூர் அருகே உள்ள குச்சம்பட்டி பகுதியை சேர்ந்தவர் ராம்குமார் இவரது மனைவி ஆனந்தஜோதி (30). இவர்களுக்கு 4 வயதில் ஜீவா என்ற ஆண்குழந்தை இருந்தது. இந்தநிலையில் ராம்குமார் மனைவி ஆனந்தஜோதிக்கும் அதே ஊரைச்சேர்ந்த மருதுபாண்டி (24) என்ற வாலிபருக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டுள்ளது. நாளடைவில் அது கள்ள காதலாக மாறியது. அடிக்கடி இருவரும் தனிமையில் சந்தித்து உல்லாசமாக இருந்து வந்துள்ளனர்.
இந்நிலையில் ஆனந்தஜோதி தனது கள்ளக்காதலனுடன் தனிமையில் இருப்பதை 4 வயது மகன் ஜீவா பார்த்து விட்டான். எங்கே தனது கணவரிடம் மகன் சொல்லிவிடுவானோ என்ற அச்சத்தில் பெற்ற மகன் என பார்க்காமல் சிறுவன் ஜீவாவை கழுத்தை நெறித்து கொலைசெய்துவிட்டு விஷபூச்சி கடித்து மகன் மயங்கி விழுந்தாக நாடகமாடி உள்ளார். உடனே அருகே உள்ள அரசுமருத்துவமனைக்கு சிறுவனை அழைத்து சென்று பரிசோதித்ததில் சிறுவன் ஏற்கனவே இறந்துவிட்டதாக டாக்டர்கள் கூறினர்.
எனினும் டாக்டருக்கு சிறுவன் இறப்பில் சந்தேகம் இருந்ததால் அருகிலுள்ள வி.சத்திரப்பட்டி காவல்நிலையத்திற்கு தகவல் கொடுத்தனர். தந்தை ராம்குமார் வி.சத்திரப்பட்டி காவல்நிலையத்தில் புகார் அளித்தார். முதலில் சந்தேக மரணம் என போலீசார் வழக்கு பதிவு செய்தனர். தாய் ஆனந்தஜோதி மீது சந்தேகம் வலுத்ததால் போலீசார் தாயிடம் துருவிதுருவி விசாரணை செய்ததில் திடுக்கிடும் தகவல் போலீசுக்கு தெரியவந்தது.
தகாத உறவால் பெற்ற மகனையே தாயே கழுத்தை நெறித்து கொலை செய்தது விசாரணையில் தெரியவந்தது. இதனிடையே தாய் ஆனந்தஜோதி, கள்ளகாதலன் மருதுபாண்டி ஆகியோரை 2020 ல் போலீசார் கைது செய்தனர். இந்த வழக்கு மதுரை 5வது கூடுதல் முதன்மை மாவட்டநீதிமன்றத்தில் நடைபெற்று வந்த நிலையில் அரசு தரப்பில் வக்கீல் ராஜேந்திரன் ஆஜரானார். இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி நீதிபதி ஜோசப்ராய் நேற்று தீர்ப்பளித்தார். அதில் குற்றம் நிருபனம் ஆனதால் ஆனந்தஜோதிக்கு வாழ்நாள் முழுவதும் சிறைதண்டனை வழங்கியும், ரூ.5 ஆயிரம் அபராதமும் கள்ளகாதலன் மருதுபாண்டியை வழக்கிலிருந்து விடுதலை செய்தும் நீதிபதி தீர்ப்பளித்தார்.
Read more ; பேய்கள் நிறைந்த திகிலூட்டும் தீவு.. ஊரையே காலி செய்துவிட்டு சென்ற மக்கள்..!! எங்கே தெரியுமா?