fbpx

பயங்கர அலர்ட்.. இன்று இந்த மாவட்டத்தில் எல்லாம் வெளுத்து வாங்க போகும் கனமழை…! வானிலை மையம் தகவல்…

தமிழகத்தில் வரும் 8ம் தேதி வரை மழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியீட்டு செய்தி குறிப்பில்; தமிழகத்தில் நிலவும் மேல் வளிமண்டல சுழற்சி காரணமாக இன்று முதல் வரும் 8-ம் தேதி வரை தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். நீலகிரி மாவட்டத்தில் ஓரிரு இடங்களில் இடங்களில் கனமழை முதல் மிக கனமழையும், கோயம்புத்தூர், தேனி, திண்டுக்கல், ஈரோடு, தர்மபுரி, சேலம், கள்ளக்குறிச்சி, பெரம்பலூர் மற்றும் நாமக்கல் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்ய வாய்ப்புள்ளது என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

சென்னையை பொறுத்தவரை; அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய லேசான முதல் மிதமான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 32 முதல் 33 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 26 முதல் 27 டிகிரி செல்சியஸ் அளவில் இருக்கக்கூடும். இன்று குமரிக்கடல் பகுதிகள், மன்னார் வளைகுடா, இலங்கையை ஒட்டிய தென் மேற்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய மத்திய மேற்கு வங்கக்கடல் பகுதிகள், தமிழ்நாடு கடலோரப்பகுதிகள், தெற்கு ஆந்திர கடலோரப்பகுதிகள், கர்நாடக கடலோரப்பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய மத்தியகிழக்கு அரபிக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 45 முதல் 55 கிலோ மீட்டர் வேகத்திலும் இடைஇடையே 65 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும் என்பதால் மீனவர்கள் கடல் பகுதிகளுக்கு செல்ல வேண்டாம் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

Vignesh

Next Post

இஞ்சியை ஏன் தினமும் உணவில் சேர்த்து கொள்ள வேண்டும்..? இத்தனை நன்மைகள் இருக்கா...

Fri Aug 5 , 2022
இஞ்சி ஒரு பயனுள்ள உணவுப்பொருள் ஆகும்.. ஆன்டிஆக்ஸிடன்ட்கள் மற்றும் பாக்டீரியா எதிர்ப்பு பண்புகளால் நிரம்பிய, இஞ்சி அதன் பெரும்பாலான ஆரோக்கிய நன்மைகளை ஜிஞ்சரால் மூலம் பெறுகிறது, இது மனிதர்களின் ஆரோக்கியத்தை பெரிய அளவில் மேம்படுத்துகிறது. ஜிஞ்சரால் அழற்சி எதிர்ப்பு மற்றும் புற்றுநோய்க்கு எதிரானது மற்றும் நுண்ணுயிரிகளுக்கு எதிரான உயிரியல் சேர்மங்களைக் கொண்டுள்ளது. தினமும் பல்வேறு வடிவங்களில் இஞ்சியை உட்கொள்வதால் பல நன்மைகள் உள்ளன.. இஞ்சி குமட்டலுக்கு சிகிச்சையளிக்கிறது: அஜீரணத்தின் மோசமான […]

You May Like