fbpx

தமிழகமே… அரசு பேருந்தில் இவர்கள் அனைவருக்கும் கட்டணமில்லா பயணம்…! அமைச்சர் சிவசங்கர் தகவல்…!

தமிழக அரசு போக்குவரத்து கழகம் தனியாருக்கு விற்கப்படுகிறதா என்ற கேள்விக்கு அமைச்சர் விளக்கம் அளித்துள்ளார்.

இதுகுறித்து போக்குவரத்துத் துறை அமைச்சர் சிவசங்கர் தனது விளக்க குறிப்பில்; தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகங்கள் கிராம மக்கள் உட்பட அனைத்து தரப்பு மக்களும் பயன்பெறும் வகையில் நிறைவான போக்குவரத்து சேவை ஆற்றி வருகிறது. மேலும், சமூக நலன், கல்வி மேம்பாடு, வேலைவாய்ப்பிற்காக அனைத்து மகளிர், மாணவர்கள், மூன்றாம் பாலினர், மாற்றுத் திறனாளிகள், சுதந்திர போராட்ட வீரர்கள் உட்பட பலருக்கு கட்டணமில்லா பேருந்து சலுகையினை வழங்கி வருகிறது.

மேலும், அரசு போக்குவரத்துக் கழகங்களில், பேருந்துகளை நவீனமயமாக்கல் உள்ளிட்ட பல்வேறு மேம்பாட்டு முறைகள் செயல்படுத்தப்பட்டு வருவது என்பது தனியார்மயமாக்கல் அல்ல என்பதையும், அப்படி எந்த நடவடிக்கையும் இல்லை என தெரிவித்துள்ளார்.

Vignesh

Next Post

மாஸ் அறிவிப்பு... பெண்களுக்கு மாதம் ரூ.1,000 வழங்கும் திட்டம்...! இது அனைத்தும் கட்டாயம்...! வழிகாட்டுதலை வெளியிட்ட தமிழக அரசு...!

Tue Aug 9 , 2022
அரசு பள்ளி மாணவிகளுக்கு மாதம் ரூ.1000 நிதியுதவி, திட்டத்தை செயல்படுத்துவதற்கான வழிகாட்டுதல்களை தமிழக அரசு வெளியிட்டுள்ளது. இது குறித்து சமூக நலத்துறை செயலர் வெளியிட்டுள்ள அரசாணையில், இத்திட்டத்தை நிறைவேற்றுவதற்கான வடிவமைப்பு, வங்கிக்கணக்கில் பணம் செலுத்துதல், பயனாளிகளின் தகுதி, தொகை, திட்ட மேலாண்மை, மாநில, மாவட்ட அளவிலான குழுக்கள், ஒற்றைச்சாளர சேவை உள்ளிட்டவை குறித்த உத்தரவுகளை பிறப்பிக்கும்படி சமூக நலத்துறை இயக்குநர் அரசுக்கு கோரிக்கை விடுத்தார். அதை ஏற்றுக் கொண்ட அரசு, […]

You May Like