fbpx

நூலிலையில் உயிர் தப்பிய அமைச்சர்! எதிர்பாராத விதமாக திடீரென கவிழ்ந்த படகு!!

தெலங்கானா மாநில அமைச்சர் பயணம் செய்துகொண்டிருந்த படகு திடீரென கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்திலிருந்து நூலிலையில் அமைச்சர் உயிர் தப்பியுள்ளார். இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தெலங்கானா மாநிலத்தில் பிற்படுத்தோர் நலத்துறை மற்றும் நுகர்பொருள் வழங்கல் துறை அமைச்சரான காங்குலா கமலாகர், தெலங்கானா மாநிலம் உருவாகி பத்து ஆண்டுகள் ஆனதை கொண்டாடுவதற்காக நடத்தப்பட்ட நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக சென்றுள்ளார். 

தெலங்கான மாநிலம் கரீம் நகரில் உள்ள ஆசிஃப் நகருக்கு நேற்று அமைச்சர் காங்குலா கமலாகர் படகில் பயணம் செய்துகொண்டிருந்தார். அப்போது திடீரென எதிர்பாராத விதமாக படகு கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.  இதனையடுத்து உடனடியாக அருகில் இருந்த அதிகாரிகள், காவலர்கள் மற்றும் நிர்வாகிகள் அமைச்சரை காப்பாற்றினார்கள். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது. அமைச்சர் நலமுடன் இருப்பதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Baskar

Next Post

மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம், கடலூரில் கடல் சீற்றம் - எச்சரிக்கை!

Fri Jun 9 , 2023
கடலூர் மாவட்டத்தைச் சேர்ந்த மீனவர்கள் இன்று பிற்பகல் முதல் மறு அறிவிப்பு வரும் வரை கடலுக்கு மீன்பிடிக்க செல்ல வேண்டாம் என மாவட்ட மீன்வளத்துறை அறிவுறுத்தியுள்ளது. வங்க கடல் பகுதியில் நிலவும் மோசமான வானிலை மற்றும் வேகமாக காற்று வீசும் காரணமாக மாவட்ட மீன்வளத்துறை கடலுக்கு செல்ல வேண்டாம் என அறிவித்துள்து. கடலூரில் கடல் சற்று சீற்றத்துடனும் கொந்தளிப்புடனும் காணப்படுகிறது.  அரபிக் கடலில் புயல் உருவாகியுள்ளதால் தமிழக வங்கக் கடல் […]
குமரியில் திடீரென உருவான கடல் சீற்றம்..! சுற்றுலாப் பயணிகள் குளிக்க தடை..!

You May Like