காரைக்குடி காவல் நிலையத்திற்கு ஒரு வழக்குக்காக கையெழுத்து போட வந்த ஒரு நபரை காரில் வந்த 5 பேர் கொண்ட கும்பல் ஓட ஓட விரட்டி வெட்டி படுகொலை செய்திருக்கிறது.
அதாவது தன்னுடைய கூட்டாளிகளுடன் சென்ற மதுரையைச் சேர்ந்த வினித் என்பவரை வழிமறித்து அந்த மரண கும்பல் கொலை செய்திருக்கிறது. சம்பவ இடத்திலிருந்து வினீத்தின் நண்பர்கள் 3 பேரிடம் காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த பயங்கர சம்பவம் காரணமாக காரைக்குடியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.