மத்திய அரசு 500 ரூபாய் நோட்டை தடை செய்யப்போவதாக இணையத்தில் வைரலான செய்தி போலியானது என PIB விளக்கம் அளித்துள்ளது.
தொழில்நுட்பம் அதிகரித்து வரும் இந்த காலத்தில் சமூக வலைத்தளங்களில் போலி செய்திகள் ஒருபக்கம் அதிகரித்துக் கொண்டே வருகிறது. அந்த வகையில் மத்திய அரசு 500 ரூபாய் நோட்டு மற்றும்ஆதார் கார்டை தடை செய்யப் போவதாக இணையத்தில் வீடியோ ஒன்று வைரலாக பரவி வந்தது. தவறான செய்திகளை Fact Check செய்யும் மத்திய அரசின் உண்மைச் சரிபார்ப்புக் குழு (PIB Fact Check) தளம், இந்த செய்தி போலி என தெரிவித்துள்ளது. மேலும் இதுபோன்ற தவறான தகவல்களை பரப்புவோர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் எச்சரித்துள்ளது.
போலி செய்திகளை தடுக்கும் விதமாகப் பத்திரிகை தகவல் பணியகம் டிசம்பர் 2019 இல் இந்த உண்மைச் சரிபார்ப்புக் குழுவைத் தொடங்கியது. அதன் நோக்கம் “பல்வேறு சமூக ஊடக தளங்களில் பரவி வரும் அரசாங்கத்தின் கொள்கைகள் மற்றும் திட்டங்கள் தொடர்பான தவறான தகவல்களை அடையாளம் காணப்பட்டு, அதனுடைய உண்மைத்தன்மையை மக்களுக்கு எடுத்து சொல்லும் விதமாக உருவாக்கப்பட்ட ஒன்று.