தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக உயர்ந்தார் ரம்பா… பல முன்னணி ஹீரோக்களுடன் இணைந்து பல சூப்பர் ஹிட் படங்களில் நடித்தார். புகழின் உச்சத்தில் இருந்தபோதே, 2010 -ம் ஆண்டு இந்திரகுமார் பத்மநாதன் என்பவரை திருமணம் செய்து கொண்டார்… இலங்கை தமிழரான இந்திரன் பத்மநாதன், மிகப்பெரிய தொழிலதிபராவார்.. திருமணத்துக்குபிறகு தம்பதி இருவரும் துபாயில் செட்டில் ஆனார்கள்.. இந்த தம்பதிகளுக்கு 2 மகள்கள் மற்றும் ஒரு மகன் 3 குழந்தைகள் இருக்கிறார்கள்.
இந்நிலையில் கடந்த சில தினங்களாக நடிகை ரம்பா விவாகரத்து செய்யவுள்ளார் என்ற தகவல் இணையத்தில் வேகமாகப் பரவியது. குறிப்பாக இருவருக்கும் இடையில் அடிக்கடி சண்டை வருவதாகவும் பல விஷயங்களில் இருவரது கருத்தும் மாறுபட்டு இருப்பதாகவும் குறிப்பிட்டு இந்தத் தகவல் வெளியானது. இது பலருக்கும் அதிர்ச்சியைக் கொடுத்தது. இப்படியான நிலையில், நடிகை ரம்பா விவாகரத்து செய்தி தொடர்பாக தனது கருத்தினைத் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் பேசும்போது, ” நான் விவாகரத்து செய்யவுள்ளதாக வெளியான தகவல் பொய்யானது. ஏன் இதுபோன்ற பொய்யான தகவலைப் பரப்புகின்றார்கள் எனத் தெரியவில்லை. இது போன்ற தகவல்கள் எங்களுக்கு வருத்தத்தை ஏற்படுத்துகின்றது. எங்களைப் பற்றிச் சிந்திக்காமல் இதுபோன்ற பொய்யான தகவலைப் பரப்புகின்றார்கள்” எனத் தெரிவித்துள்ளார்.
மேலும், “கணவன் மனைவி என்றாலே இருவருக்கும் இடையில் சில பிரச்னைகள் வரும். அதுபோல எங்களுக்கு இடையிலும் சில பிரச்னைகள் அவ்வப்போது வரும், இது சாதாரணமான விஷயம். குழந்தைகள் தொடர்பான முடிவுகளில் இருவருக்கும் இடையில் கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டதாகவும்”, கூறினார். அதாவது, குழந்தைகளை அழைத்துக் கொண்டு அவர் அமெரிக்கா செல்லலாம் எனக் கூறியதாகவும், ரம்பா இந்தியா செல்ல விரும்புவதாகவும் அதனால் இருவருக்கும் இடையில் கொஞ்சம் பிரச்னைகள் ஏற்பட்டதாகவும் கூறப்படுகின்றது.
Read more ; 2,325 கி.மீ ரிவர் ராஃப்டிங் செய்யும் BSF மகளிர் அணி..!! நோக்கம் என்ன தெரியுமா?