கடந்த சில நாட்களாக அமெரிக்காவில் பறவைக்காய்ச்சல் (H5N1) 2.3.4.4b வைரஸ் பாதிப்பு வேகமாக அதிகரித்து வருகிறது.. விலங்குகளால் பரவும் நோய்கள் பரவுவதை தடுப்பதற்கும், விலங்குகள் மற்றும் மனித ஆரோக்கியத்தைப் பாதுகாப்பதற்கும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுப்பதன் முக்கியத்துவத்தை நினைவுபடுத்தும் வகையில், பறவை காய்ச்சல் பாதிப்பு அதிகரித்துள்ளதாக நிபுணர்கள் எச்சரித்துள்ளனர்.

ஸ்கங்க்ஸ், நரிகள், ரக்கூன்கள், கரடிகள், மலை சிங்கங்கள், டால்பின்கள் உள்ளிட்ட பல பறவைகள், விலங்குகளில் H5N1 வைரஸ் கண்டறியப்பட்டுள்ளதாக அமெரிக்க விவசாயத் துறை தெரிவித்துள்ளது. 47 மாநிலங்களில் 58 மில்லியன் கோழிகள் பாதிக்கப்பட்டுள்ளன. மேலும், ஒரு வாரத்திற்குள் கிட்டத்தட்ட 6,200 காட்டுப் பறவைகள் பாதிக்கப்பட்டுள்ளன.
சமீபத்திய ஆண்டுகளில், உலகின் பல்வேறு பகுதிகளில் பறவைக் காய்ச்சல் பரவி வருகிறது என்று உலக சுகாதார மையம் தெரிவித்துள்ளது.. இது சுகாதார அதிகாரிகள் மற்றும் பொதுமக்கள் மத்தியில் கவலையை ஏற்படுத்தியுள்ளது என்றும் தெரிவித்துள்ளது.. மேலும் பறவை காய்ச்சல் பரவுவதை உன்னிப்பாகக் கண்காணித்து, நோய்த்தொற்றின் அபாயத்தைக் குறைப்பது மற்றும் வைரஸ் பரவுவதைத் தடுப்பது குறித்த வழிகாட்டுதலை உலக சுகாதார மையம் வெளியிட்டுள்ளது..
அந்த வழிகாட்டுதலில் “ பறவைக் காய்ச்சல் பரவுவதைத் தடுக்க, நல்ல சுகாதாரத்தைக் கடைப்பிடிப்பது மற்றும் பாதிக்கப்பட்ட பறவைகள் அல்லது அவற்றின் எச்சங்களைத் தவிர்ப்பது முக்கியம். பறவைகள் அல்லது பறவை தயாரிப்புகளை கையாண்ட பிறகு பறவை காய்ச்சல் அறிகுறிகளை நீங்கள் சந்தித்தால், உடனடியாக மருத்துவ உதவியை நாடுங்கள்.

பறவைக் காய்ச்சல் ஒரு தொற்றுநோய் அல்ல என்பதை நினைவில் கொள்வது அவசியம், அதாவது இது உலகளவில் பரவவில்லை.. பல நாடுகளில் உள்ள அதிக எண்ணிக்கையிலான பறவையினங்களை பாதிக்கவில்லை. இருப்பினும், இது இன்னும் தீவிரமான பொது சுகாதார கவலையாக உள்ளது மற்றும் பறவைகளுடன் வேலை செய்பவர்கள் அல்லது பறவைகளுடன் தொடர்பு வைத்திருப்பவர்கள் இதை தீவிரமாக எடுத்துக் கொள்ள வேண்டும்..” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது..
இந்நிலையில் பறவைக் காய்ச்சல் பரவல் அதிகரிப்புக்கு மத்தியில், நோயின் தாக்கம் மற்றும் அது மனிதர்களுக்கும் பரவுமா என்பது குறித்து சுகாதார அதிகாரிகள் தொடர்ந்து கவலை தெரிவித்து வருகின்றனர்.. அமெரிக்காவின் கார்னெல் பல்கலைக்கழகத்தின் தொற்றுநோய் தடுப்பு மற்றும் பதிலளிப்பு மையத்தின் இயக்குனர் டாக்டர் ஜே வர்மா இதுகுறித்து பேசிய போது, “பறவைக் காய்ச்சலால் தற்போது என்ன நடக்கிறது மற்றும் எதிர்காலத்தில் என்ன நடக்கக்கூடும் என்பது குறித்து நிறைய நிச்சயமற்ற தன்மை உள்ளது. இது வெவ்வேறு பறவை இனங்கள் மத்தியில் மிக எளிதாக பரவுகிறது போல் தெரிகிறது. உலகில் பல வகையான பறவை இனங்கள் உள்ளன, அவை அதிலிருந்து மிக விரைவாக இறந்துவிடுகின்றன.. எனவே இது அடுத்த பெருந்தொற்றாக மாறுமா என்பது தெரியவில்லை..” என்று தெரிவித்தார்.