fbpx

#BigNews : தமிழக மக்களுக்கு அடுத்த ஷாக்.. இனி ஆண்டுதோறும் 6% மின்கட்டணம் உயரும்..

தமிழகத்தில் இனி ஆண்டுதோறும் 6% மின் கட்டணத்தை உயர்த்த அனுமதி வழங்கப்பட்டுள்ளது..

தமிழகத்தில் 8 ஆண்டுகளுக்கு பிறகு மின் கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது.. இந்த புதிய மின் கட்டணம் இன்று முதல் அமலுக்கு வந்துள்ளது.. அதன்படி மாதம், 100 யூனிட் வரை மின்சாரம் பயன்படுத்தினால் கட்டணம் இல்லை.. 200 யூனிட் வரை பயன்படுத்துபவர்களுக்கு ரூ.27.50 கூடுதலாக கட்டணம் செலுத்த வேண்டும்.. 301 – 400 வரை பயன்படுத்துவோருக்கு மாதம் ரூ.147.50 செலுத்த வேண்டும்.. இதே போல் 500 யூனிட்டுக்கு மேல் பயன்படுத்துவர்களுக்கு ரூ.298.50 கூடுதல் மின் கட்டணம் செலுத்த வேண்டும்.. கேஸ் இணைப்புகளை போல், 100 யூனிட் இலவச மின்சாரத்தை வேண்டாம் என்று எழுதிக் கொடுக்கும் திட்டமும் அமலுக்கு வந்துள்ளது..

இந்நிலையில் ஆண்டுதோறும் 6% மின் கட்டணத்தை உயர்த்த அனுமதி வழங்கப்பட்டுள்ளது.. அதன்படி ஜூலை மாதம் 1-ம் தேதி மின் கட்டணத்தை உயர்த்திக் கொள்ள தமிழ்நாடு மின் பகிர்மான கழகத்திற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.. 2022-23-ம் ஆண்டுக்கு பிறகு ஒவ்வொரு ஆண்டும் ஜூலை மாதம் 6% மின் கட்டணத்தை உயர்த்திக் கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது..

தமிழ்நாடு மின்சார வாரியத்தின் கடன் சுமை சுமார் 1.45 லட்சம் கோடி இருப்பதால், மின் கட்டணத்தை 6% உயர்த்தினால் மட்டுமே கடனை செலுத்த மின் வாரியம் கேட்டுக் கொண்டதை அடுத்து, மின் பகிர்மான கழகம் அனுமதி வழங்கியதாக கூறப்படுகிறது.. ஏற்கனவே விலைவாசி உயர்வு, பெட்ரோல் டீசல் விலை உயர்வு ஆகியவற்றால் சாமானிய மக்கள் கடும் சிரமங்களை சந்தித்து வருகின்றனர்.. இந்த சூழலில் ஆண்டுதோறும் மின் கட்டணம் உயர்த்தப்படும் என்ற தகவல் மக்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது..

Maha

Next Post

5 ரூபாய் நோட்டு மூலம் லட்சக்கணக்கில் பணம் சம்பாதிக்கலாம்.. எப்படின்னு தெரிஞ்சுக்க இதை படிங்க..

Sat Sep 10 , 2022
உங்களுக்கு பழைய மற்றும் அரிய நாணயங்கள் மற்றும் நோட்டுகளை சேகரிப்பது ஒரு பொழுதுபோக்காக இருந்தால், நீங்கள் வீட்டில் இருந்த லட்சக்கணக்கில் பணம் சம்பாதிக்க முடியும்.. ஆம்.. தற்போது பழைய நாணயங்கள் மற்றும் ரூபாய் நோட்டுகளுக்கு ஆன்லைனில் நல்ல மதிப்பு உள்ளது.. எனவே அவற்றை ஆன்லைனில் விற்று நல்ல பணம் சம்பாதிக்கலாம்.. அந்த வகையில் பழைய 5 ரூபாய் நோட்டை ஆன்லைனில் மாற்றி லட்சக்கணக்கில் சம்பாதிக்கலாம்.. ஆனால் அந்த 5 ரூபாய் […]

You May Like